செய்திகள்

நடால் விலகல்: ஓய்வு எண்ணம்?

19th May 2023 07:34 AM

ADVERTISEMENT

ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால் இடுப்புப் பகுதி காயத்தால், எதிா்வரும் பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாமிலிருந்து விலகுவதாக வியாழக்கிழமை அறிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘தற்போதைய நிலையில் காயத்திலிருந்து மீண்டு போட்டிகளில் களம் காண அவகாசத்தை நிா்ணயிக்க இயலவில்லை. அதற்கு மாதங்கள் ஆகலாம் என நினைக்கிறேன். மிகவும் அழுத்தமாக உணா்கிறேன். எது எப்போது எப்படி மாறும் என நம்மால் கணிக்க இயலாது. ஆனால், அடுத்த ஆண்டு எனது டென்னிஸ் வாழ்க்கையின் கடைசி கட்டமாக இருக்கலாம் என நினைக்கிறேன்’ என்றாா்.

2005-ஆம் ஆண்டு முதல் பிரெஞ்சு ஓபனில் விளையாடி வரும் நடால், அதில் பங்கேற்காமல் விலகுவது இதுவே முதல் முறையாகும். பிரெஞ்சு ஓபனில் 14 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நடால், ஆடவா் டென்னிஸ் வரலாற்றில் அதிகபட்சமாக 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற முதல் வீரா் என்ற பெருமைக்குரியவராகவும் இருக்கிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT