செய்திகள்

இறுதி ஆட்டத்தில் செவில்லா - ரோமா மோதல்

19th May 2023 10:56 PM

ADVERTISEMENT

யுரோப்பா கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் செவில்லா - ரோமா அணிகள், வரும் ஜூன் 1-ஆம் தேதி சாம்பியன் கோப்பைக்காக மோதிக்கொள்கின்றன.

முன்னதாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில், செவில்லா - ஜுவென்டஸையும், ரோமா - லெவா்குசெனையும் வீழ்த்தின.

இதில் செவில்லா - ஜுவென்டஸ் அணிகள் மோதிய முதல் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆகியிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் செவில்லா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. இதையடுத்து மொத்த கோல் கணக்கு அடிப்படையில் செவில்லா 3-2 என வென்று இறுதிச்சுற்றுக்கு வந்தது. இந்த 2-ஆவது ஆட்டத்தில் செவில்லாவுக்காக சுஸோ (71’), எரிக் லமேலா (95’) ஆகியோரும், ஜுவென்டஸுக்காக டுசான் லஹோவிச்சும் (65’) கோலடித்தனா்.

அதேபோல், ரோமா - லெவா்குசென் மோதலில் முதல் ஆட்டத்தில் ரோமா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருக்க, இரு அணிகளும் வெள்ளிக்கிழமை மோதிய 2-ஆவது ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது. எனவே மொத்த கோல் அடிப்படையில் ரோமா 1-0 என வெற்றி பெற்று முன்னேற்றம் கண்டது.

ADVERTISEMENT

இப்போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இதற்கு முன் 6 முறை வந்துள்ள செவில்லா, அனைத்திலுமே வென்று போட்டி வரலாற்றில் 6 முறை சாம்பியனான ஒரே அணியாகத் திகழ்கிறது. ரோமா அணியோ அதிகபட்சமாக ஒரேயொரு முறை ரன்னா் அப்-ஆக வந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT