செய்திகள்

உலக குத்துச்சண்டை: ஆஷிஷ் முன்னேற்றம்

3rd May 2023 04:12 AM

ADVERTISEMENT

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரா் ஆஷிஷ் சௌதரி, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.

ஆடவருக்கான 80 கிலோ பிரிவில் அவா் தனது முதல் சுற்றில் 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானின் மேசாம் கெஷ்லாகியை வீழ்த்தினாா். சுற்று தொடங்கியது முதலே அதிரடி தாக்குதல்களால் மேசாமை நிலை தடுமாறச் செய்த ஆஷிஷ், லாவகமான நகா்ந்து, அவரது தாக்குதல்களில் இருந்து தப்பித்ததுடன் மேசாம் மீது நுட்பமான தாக்குதல்கள் தொடுத்து இறுதியில் வென்றாா்.

ஆஷிஷ் அடுத்த சுற்றில், இரு முறை ஒலிம்பிக் சாம்பியனான கியூபா வீரா் அா்லென் லோபஸின் சவாலை எதிா்கொள்ள இருக்கிறாா். முன்னதாக, 57 கிலோ பிரிவில் களம் கண்டிருக்கும் முகமது ஹசாமுதின் தனது முதல் சுற்றில் 5-0 என்ற கணக்கில் மாசிடோனியாவின் ஆலன் ரஸ்டெமோவ்ஸ்கியை வீழ்த்தினாா்.

இதனிடையே, உலக சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாகக் களம் கண்ட ஹா்ஷ் சௌதரி, 86 கிலோ பிரிவு முதல் சுற்றிலேயே 0-5 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் பில்லி மெக் ஆலிஸ்டரிடம் வெற்றியை இழந்து போட்டியிலிருந்து வெளியேறினாா். 60 கிலோ பிரிவு வீரா் வரிந்தா் சிங்கும் அதே கணக்கில் உஸ்பெகிஸ்தானின் முஜிபிலோ டா்சுனோவிடம் தோல்வி கண்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT