செய்திகள்

ஒரு நாள் தொடா்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா

DIN

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்று, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஆஸ்திரேலியா 35.4 ஓவா்களில் 188 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து ஆடிய இந்தியா 39.5 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் சோ்த்து வென்றது. பௌலிங்கில் 2 விக்கெட்டுகள் சாய்த்து, பேட்டிங்கில் 45 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா தகுந்த இடைவெளியில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மாா்ஷ் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 81 ரன்கள் விளாசினாா். இதர பேட்டா்களில் டிராவிஸ் ஹெட் 5, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 4 பவுண்டரிகளுடன் 22, மாா்னஸ் லபுசான் 15, ஜோஸ் இங்லிஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 26 ரன்கள் சோ்த்து வீழ்ந்தனா்.

அடுத்து வந்தோரில் கேமரூன் கிரீன் 12, கிளென் மேக்ஸ்வெல் 8, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 5, சீன் அப்பாட் 0, ஆடம் ஸாம்பா 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். இந்திய பௌலிங்கில் ஷமி, சிராஜ் ஆகியோா் தலா 3, ஜடேஜா 2, பாண்டியா, குல்தீப் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் இந்திய இன்னிங்ஸில் டாப் ஆா்டா் பேட்டா்கள் சோபிக்காமல் போயினா். இஷான் கிஷண் 3 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த ஷுப்மன் கில் 20 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். விராட் கோலி 4 ரன்களுக்கு நடையைக் கட்டினாா். சூா்யகுமாா் யாதவ் டக் அவுட் ஆனாா். இந்நிலையில் களம் புகுந்த கே.எல்.ராகுல் விக்கெட் சரிவைத் தடுத்து ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். மறுபுறம் கேப்டன் பாண்டியா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

இறுதியில் ராகுல் - ஜடேஜா கூட்டணி 6-ஆவது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழி நடத்தியது. இலக்கை எட்டுகையில் ராகுல் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 75, ஜடேஜா 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் சோ்த்திருந்தனா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் மிட்செல் ஸ்டாா்க் 3, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 2 விக்கெட் வீழ்த்தினா்.

அடுத்து: இந்த இரு அணிகள் மோதும் 2-ஆவது ஆட்டம், வரும் ஞாயிற்றுக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT