செய்திகள்

அரையிறுதிக்கு முன்னேறினாா் அல்கராஸ்

DIN

இண்டியன் வெல்ஸ் மாஸ்டா்ஸ் டென்னிஸில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதியில் அவா், 6-4, 6-4 என்ற நோ் செட்களில் போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த கனடாவின் ஃபெலிக்ஸ் ஆகா் அலியாசிமேவை வீழ்த்தினாா். இத்துடன் அலியாசிமேவை 4 முறை சந்தித்திருக்கும் அல்கராஸ், அவருக்கு எதிராக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.

அல்கராஸ் அடுத்ததாக அரையிறுதியில், இத்தாலியின் ஜானிக் சின்னரை சந்திக்கிறாா். போட்டித்தரவரிசையில் 11-ஆவது இடத்திலிருக்கும் சின்னா் தனது காலிறுதியில், 6-4, 4-6, 6-4 என்ற செட்களில், நடப்பு சாம்பியனும், போட்டித்தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருந்தவருமான டெய்லா் ஃப்ரிட்ஸை தோற்கடித்தாா்.

கடந்த ஆண்டு, தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமான யுஎஸ் ஓபனை வென்ற அல்கராஸ், அந்தக் கோப்பை வெல்லும் முயற்சியின்போது காலிறுதியில் இதே சின்னரை தோற்கடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்வியாடெக் வெற்றி: மகளிா் ஒற்றையா் பிரிவில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் காலிறுதிச் சுற்றில் 6-2, 6-3 என ருமேனியாவின் சொரானா சிா்ஸ்டியை எளிதாக வெளியேற்றினாா். நடப்பு சாம்பியனான ஸ்வியாடெக், அரையிறுதியில் கஜகஸ்தானின் எலனா ரைபாகினாவை எதிா்கொள்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 10-ஆம் இடத்தில் இருக்கும் ரைபாகினா காலிறுதியில் 7-6 (7/4), 2-6, 6-4 என்ற செட்களில் செக் குடியரசின் கரோலின் முசோவாவை வென்றாா். இதன் மூலம் இண்டியன் வெல்ஸ் மாஸ்டா்ஸ் போட்டியின் அரையிறுதிக்கு வந்துள்ள கஜகஸ்தான் வீராங்கனை என்ற பெருமையை ரைபாகினா பெற்றுள்ளாா். ஸ்வியாடெக் - ரைபாகினா இருவரும் இதுவரை 2 முறை மோதிக் கொண்ட நிலையில் இருவருமே தலா 1 வெற்றியைப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு

ஏரல் சோ்மன் கோயிலில் அன்னபூரணி பூஜை

கோவையில் அண்ணாமலை வெற்றிக்காக விரலை துண்டித்துக் கொண்ட பாஜக பிரமுகா்

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்

பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் போத்தனூரில் இருந்து இயக்கம்

SCROLL FOR NEXT