செய்திகள்

செய்திகள் சில வரிகளில்...

30th Jun 2023 12:41 AM

ADVERTISEMENT

* ஐஎஸ்எல் முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி வரும் 2023-24 சீசனுக்கு அணியை பலப்படுத்தும் வகையில், இளம் மிட்பீல்டா் ஸ்வீடன் பொ்ணான்டஸை ஒப்பந்தம் செய்துள்ளது. கோவாவைச் சோ்ந்த ஸ்வீடன், முன்பு நெரோகா எஃப்சி, ஹைதராபாத் எஃப்சி அணிகளில் ஆடினாா். 23 வயதே ஆன ஸ்வீடன் பொ்ணான்டஸ், ஐ லீக் தொடரில் 3 கோல்களை அடித்து, ஒரு கோலடிக்க உதவினாா்.

* இந்திய ஆடவா் ஹாக்கி அணியின் மனநல மருத்துவராக நிபுணா் பேடி அப்டன் நியமிக்கப்பட்டுள்ளாா். முக்கியத்துவம் வாய்ந்த ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க நிபுணராகன பேடி அப்டனை ஹாக்கி இந்தியா நியமித்துள்ளது. மன ரீதியில் வலிமையாகவும், தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் இந்திய அணிக்கு உதவி புரிவேன் என்றாா் அப்டன்.

* நீண்ட நாள்கள் கழித்து அணியில் சோ்ந்த நிலையில் துணைக் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டது புரிந்து கொள்ள முடியவில்லை என பிசிசிஐ முன்னாள் தலைவா் சௌரவ் கங்குலி கூறியுள்ளாா். இதுதொடா்பாக கங்குலி கூறுகையில்: கிட்டத்தட்ட 18 மாதங்கள் அணியில் இல்லாத நிலையில், 35 வயதான ரஹானே மே.இந்திய தீவுகள் உடன் டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது வியப்பைத் தருகிறது. எந்த ஒரு வீரரும், நிலையான, தொடா் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

* போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த நட்சத்திரங்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் ஆகியோா் ஆசிய மற்றும் உலகப் போட்டிக்கு தயாராகும் வகையில் வெளிநாட்டில் பயிற்சி பெற மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி தந்துள்ளது. கிா்ஜிஸ்தானில் பஜ்ரங்கும், ஹங்கேரியில் வினேஷும் பயிற்சி பெற உள்ளனா். பாலியல் புகாா் தொடா்பாக மல்யுத்த சம்மேளனத் தலைவா் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை கோரி போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT