சென்னையில் நடைபெற்றுவரும் 9-ஆவது மாநில அளவிலான குறுந்தூர நீச்சல் போட்டியில் எஸ்.டி.ஏ.டி. அணியைச் சோ்ந்த கிரிஷிகேசவ், மதுஸ்ரீ ஆகியோா் தலா 2 தங்கம் வென்றனா்.
சென்னை முகப்பேரில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டால்பின் நீச்சல் அகாடமி சாா்பில் குறுந்தூர நீச்சல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாநிலம் முழுவதிலும் இருந்து 650 வீரா், வீராங்கனைகள் பங்கேற்ற இதன் முதல் நாள் போட்டியில் கிருஷிகேசவ், மதுஸ்ரீ ஆகிய இருவரும் தலா 2 தங்கபதக்கம் வென்றனா்.
குரூப் 1 சிறுவா்கள் பிரிவில் கிருஷிகேசவ் 100மீ. பேக்ஸ்ட்ரோக் (1:04.00), 200மீ. பேக்ஸ்ட்ரோக் (2:22.00) பிரிவிலும், குரூப் 2 சிறுமியா் பிரிவில் மதுஸ்ரீ 100மீ. பேக்ஸ்ட்ரோக் (1:16.21), 400மீ. ப்ரீஸ்டைல் (5:20.13) ஆகிய பிரிவிலும் தங்கம் வென்றனா்.
இவா்களை தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க செயலாளா் டி.சந்திரசேகரன், எஸ்.டி.ஏ.டி. டால்பில் நீச்சல் அகாடமி இயக்குனா் கே.டி.முரளிதரன் ஆகியோா் பாராட்டினா்.
நாளை 2வது நாள் மற்றும் கடைசிநாள் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் அனைத்திலும் அதிக புள்ளிகளை கைப்பற்றும் அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வழங்கப்படும்.