செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 400 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!

DIN

இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 400 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி உள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனின் ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் மூன்றாம் நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 123 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மார்னஸ் லபுஷேன் 41 ரன்கள், கேமரூன் கிரீன் 7 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று  நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே லபுஷேன் 41 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின், கேமரூன் கிரினுடன் ஜோடி சேர்ந்தார் அலெக்ஸ் கேரி. இந்த இணை நிதானமாக விளையாடியது. கேமரூன் கிரீன் 25 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின், மிட்செல் ஸ்டார்க் களமிறங்கினார். சிறப்பாக விளையாடிய அலெக்ஸ் கேரி அரை சதம் அடித்தார். மறுமுனையில் அவருடன் பேட் செய்த மிட்செல் ஸ்டார்க் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

6 விக்கெட்டுகளை இழந்துள்ள ஆஸ்திரேலிய அணி 400 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT