ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை மேற்கிந்திய தீவுகள் அணி 3-0 என வெற்றி பெற்றுள்ளது. இதன் கடைசிப் போட்டியில் யுஏஇ 184க்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 35.1 ஓவரில் மே.இ.தீவுகள் அணி 185/6 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: டெஸ்ட் கிரிக்கெட்டின்போது தூங்கிக்கொண்டிருந்த லபுஷேன்: வைரல் விடியோ!
இந்தப் போட்டியில் அலிக் அத்தானாஸ் முதன்முறையாக விளையாடினார். 72 பந்துகளில் அரைசதமடித்தார். முதல் 11 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். பின்னர் 26 பந்துகளில் அதிவேகமாக அரைசதமடித்தார். அடுத்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார் . பிராண்டன் கிங் தொடர்நாயகன் விருது பெற்றார்.
இதையும் படிக்க: டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்த ஷர்துல் தாக்குர்!
இதற்கு முன்பாக அறிமுக ஒருநாள் போட்டியில் க்ருணால் பாண்டியா (இந்தியா) 2021இல் 26 பந்துகளில் அரைசதமடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் க்ருணால் பாண்டியா சாதனையை சமன் செய்துள்ளார் அலிக். டி20 , டெஸ்ட் போட்டிகளில் அவரது அறிமுகப் போட்டிகாக மே.இ.தீவுகள் அணி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
அறிமுகப் போட்டியில் அதிவேக அரை சதமடித்தவர்கள் பட்டியல்:
அலிக் அத்தானாஸ் - 26 பந்துகளில்
க்ருணால் பாண்டியா - 26 பந்துகளில்
இஷான் கிஷன் - 33 பந்துகளில்
ஆர் புட்சர் - 35 பந்துகளில்
ஜே மோரிஸ் - 35 பந்துகளில்