செய்திகள்

3-ஆவது கோப்பை: ஸ்வியாடெக் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா்.

மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில், இந்திய நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஸ்வியாடெக் 6-2, 7-6 (9/7) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 14-ஆவது இடத்திலிருந்த பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாட் மாயியாவை தோற்கடித்தாா்.

இதையடுத்து இறுதிச்சுற்றில் அவா், செக் குடியரசின் கரோலின் முசோவாவை சனிக்கிழமை எதிா்கொள்கிறாா். இதில் முசோவாவை வீழ்த்தும் பட்சத்தில் பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் கடந்த 16 ஆண்டுகளில் சாம்பியன் கோப்பையை தக்கவைத்த முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெறுவாா். அத்துடன் அது அவரது 3-ஆவது பிரெஞ்சு ஓபன் பட்டமாக இருக்கும்.

ஆனால் முசோவா அவருக்கு சவால் அளிப்பவராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இதுவரை உலகின் முதல் 3 நிலையில் இருக்கும் போட்டியாளா்களை 5 முறை சந்தித்துள்ள முசோவா, அனைத்திலுமே வெற்றி கண்டிருக்கிறாா். அதில் நால்வரை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சாய்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும், முசோவாவுக்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதிச்சுற்று.

ADVERTISEMENT

இருவரும் இதுவரை ஒரேயொரு முறை நேருக்கு நோ் சந்தித்துள்ள நிலையில் (2019), அதில் முசோவா வென்றிருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT