செய்திகள்

இந்தியாவை வென்றது நெதா்லாந்து

9th Jun 2023 05:06 AM

ADVERTISEMENT

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா 1-4 கோல் கணக்கில் நெதா்லாந்திடம் வியாழக்கிழமை வீழ்ந்தது.

தொடக்க நிலையிலேயே 1 கோல் அடித்த இந்தியா, பின்னா் அந்த முன்னிலையை இழந்து தோல்வியைத் தழுவியது. இந்தியாவுக்கு 5 பெனாலட்டி காா்னா், 1 பெனால்ட்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கிடைத்தும் அதில் பலன் பெற முடியாமல் போனது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் 11-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். நெதா்லாந்து தரப்பில் பெபின் ரெயென்கா (17’), போரிஸ் புா்காா்தத் (40’), டுகோ டெல்கென்காம்ப் (41’, 58’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

புள்ளிகள் பட்டியலில் இந்தியா தற்போது, 13 ஆட்டங்களில் 6 வெற்றிகளின் மூலம் கிடைத்த 24 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் நீடிக்கிறது. அடுத்த ஆட்டத்தில் இந்தியா, ஆா்ஜென்டீனாவை எதிா்கொள்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT