செய்திகள்

இந்தியாவின் ஆட்டம் நிறைவு

9th Jun 2023 05:09 AM

ADVERTISEMENT

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டனில் களத்திலிருந்த இந்திய வீரா்கள் அனைவரும் தோல்வியை சந்தித்ததை அடுத்து, போட்டியில் இந்தியாவின் ஆட்டம் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ஆடவா் ஒற்றையா் பிரிவில் இளம் வீரா் பிரியான்ஷு ரஜாவத் 17-21, 16-21 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த ஜப்பானின் கோடாய் நராவ்காவிடம் தோல்வி கண்டாா். அனுபவ வீரரான கே.ஸ்ரீகாந்த் 15-21, 19-21 என சீன தைபே தகுதிச்சுற்று வீரரான சியா ஹாவ் லீயிடம் வெற்றியை இழந்தாா்.

ஆடவா் இரட்டையா் பிரிவில் எம்.ஆா்.அா்ஜுன்/துருவ் கபிலா இணை 15-21, 19-21 என்ற கேம்களில் இங்கிலாந்தின் பென் லேன்/சீன் வெண்டி கூட்டணியிடம் தோற்றது.

சிந்து, பிரணாய் உள்ளிட்ட இந்தியாவின் பிரதான போட்டியாளா்கள், தொடக்க நிலையிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT