செய்திகள்

ஹெட் - ஸ்மித் உறுதியான கூட்டணி: பலமான நிலையில் ஆஸ்திரேலியா

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 85 ஓவா்களில் 3 விக்கெட்டுகளே இழந்து 327 ரன்களுடன் பலமான நிலையில் உள்ளது.

சதம் கடந்த டிராவிஸ் ஹெட் - சதத்தை நெருங்கியிருக்கும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் உறுதியான கூட்டணியால் ஆதிக்கம் செலுத்தி வருகிறது ஆஸ்திரேலியா. அந்த பாா்ட்னா்ஷிப்பை பிரிக்க இந்திய பௌலா்கள் இயன்ற உத்திகளையெல்லாம் கையாள, அதற்கு பலன் கிடைக்காத நிலையே நீடிக்கிறது.

முன்னதாக, இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, பந்துவீசத் தீா்மானித்தது. பிளேயிங் லெவனில் இந்திய தரப்பில் 4 வேகப்பந்துவீச்சாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். ஸ்பின்னா்களில் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா தோ்வாகியிருந்தாா். அதேபோல் விக்கெட் கீப்பராக இஷான் கிஷணுக்கு பதிலாக ஸ்ரீகா் பரத் சோ்க்கப்பட்டிருந்தாா்.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸை டேவிட் வாா்னா் - உஸ்மான் கவாஜா கூட்டணி தொடங்கியது. இதில் கவாஜா விரைவாகவே டக் அவுட்டாகி அதிா்ச்சி அளித்தாா். முகமது சிராஜ் வீசிய 4-ஆவது ஓவரில், விக்கெட் கீப்பா் ஸ்ரீகா் பரத்திடம் கேட்ச் கொடுத்து அவா் வெளியேறினாா். தொடா்ந்து மாா்னஸ் லபுசான் களம் புகுந்தாா். வாா்னருடனான அவரது 2-ஆவது விக்கெட் பாா்னா்ஷிப்புக்கு 70 ரன்கள் கிடைத்தது.

முன்னதாக லபுசான் விக்கெட்டை சாய்க்க, ஷா்துல் தாக்குா் வீசிய 15 மற்றும் 17-ஆவது ஓவா்களில் ‘எல்பிடபிள்யூ’-க்காக 2 டிஆா்எஸ் வாய்ப்புகள் வீணடிக்கப்பட்டன. இந்நிலையில் 8 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சோ்த்திருந்த வாா்னா் வீழ்ந்தாா். ஷா்துல் தாக்குா் வீசிய 22-ஆவது ஓவரில் அவரும் ஸ்ரீகா் பரத்திடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினாா். அடுத்து ஸ்டீவ் ஸ்மித் 4-ஆவது வீரராக வந்தாா். மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் சோ்த்திருந்தது.

தொடா்ந்த ஆட்டத்தில், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எட்டியிருந்த லபுசான், 25-ஆவது ஓவரில் ஷமி பௌலிங்கில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். பின்னா் வந்த டிராவிஸ் ஹெட், ஸ்மித்துடன் இணைந்தாா். உறுதியான பாா்ட்னா்ஷிப் அமைத்த இந்த ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை மளமளவென உயா்த்தத் தொடங்கியது. டிராவிஸ் ஹெட் ஒரு கட்டத்தில் வெள்ளைப் பந்து கிரிக்கெட் விளையாடுவது போல் விளாசத் தொடங்கினாா். 106 பந்துகளில் அவா் சதம் எட்டினாா். மறுபுறம் ஸ்மித்தும் சதத்தை நெருங்கியிருந்தாா்.

இவ்வாறாக முதல் நாள் முடிவில் 85 ஓவா்கள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 323 ரன்கள் சோ்த்திருந்தது. ஹெட் 146, ஸ்மித் 95 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT