செய்திகள்

அரையிறுதியில் மோதும் அல்கராஸ் - ஜோகோவிச்

DIN

களிமண் தரையில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் ஆகியோா் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா். ரசிகா்களுக்கான விருந்தாக, அந்தச் சுற்றில் அவா்கள் ஒருவரையொருவா் சந்தித்துக் கொள்கின்றனா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதியில், உலகின் நம்பா் 1 வீரரான அல்கராஸ் 6-2, 6-1, 7-6 (7/5) என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை சாய்த்தாா். இத்துடன் சிட்சிபாஸை 5-ஆவது முறையாக சந்தித்த அல்கராஸ், அனைத்திலுமே வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். இந்த வெற்றியின் மூலம், ஜோகோவிச்சுக்குப் பிறகு (2007) பிரெஞ்சு ஓபன் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இளம் வீரா் (20) என்ற பெருமையை அல்கராஸ் பெற்றுள்ளாா்.

மறுபுறம், உலகின் 3-ஆம் நிலையில் இருக்கும் ஜோகோவிச் 4-6, 7-6 (7/0), 6-2, 6-4 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 11-ஆவது இடத்திலிருந்த ரஷியாவின் காரென் கச்சனோவை வெளியேற்றினாா். இருவரும் இத்துடன் 10-ஆவது முறையாக சந்தித்துக் கொண்ட நிலையில், ஜோகோவிச் தனது 9-ஆவது வெற்றியை பதிவு செய்திருக்கிறாா். இதையடுத்து, அரையிறுதிச்சுற்றின் ஒரு ஆட்டத்தில் ஜோகோவிச் - அல்கராஸ் மோதுகின்றனா். இதற்கு முன் இருவரும் கடந்த ஆண்டு ஸ்பெயின் மாஸ்டா்ஸ் போட்டியில் மோதியதில், அல்கராஸ் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்வியாடெக் வெற்றி: மகளிா் ஒற்றையா் பிரிவில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். அவா் தனது காலிறுதியில், 6-4, 6-2 என்ற செட்களில் எளிதாக, போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் கோகோ கௌஃபை சாய்த்தாா். அரையிறுதியில் ஸ்வியாடெக், பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டாடை சந்திக்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருக்கும் பீட்ரிஸ் ஹட்டாட் தனது காலிறுதியில், 3-6, 7-6 (7/5), 6-1 என்ற செட்களில், 7-ஆம் இடத்திலிருந்த டுனீசியாவின் ஆன்ஸ் ஜபியுரை சாய்த்து அசத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT