செய்திகள்

இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சிறந்த வீரரை உருவாக்க ஆர்வம் காட்டும் விராட் கோலி!

8th Jun 2023 06:28 PM

ADVERTISEMENT

இந்திய கிரிக்கெட்டில் சிறப்பான வீரராக உருவெடுத்து வரும் ஷுப்மன் கில்லுக்கு இந்திய அணியின் நட்சத்திர பேட்டர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி தங்களது அனுபவங்களை பகிர்ந்து அவருக்கு உதவ ஆர்வமாக உள்ளனர்.

இந்திய அணி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஷுப்மன் கில் இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஐசிசிக்கு பேட்டியளித்துள்ளனர்.

இதையும் படிக்க: விடுமுறையில் இருக்கும் குழந்தைகளை குஷிப்படுத்த புதுவித டிஷ்!

ADVERTISEMENT

ஷுப்மன் கில் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: ஷுப்மன் கில் இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய வீரராக உருவெடுக்கப் போகிறார். அவரிடம் சிறப்பான திறமை உள்ளது. ஷுப்மன் கில் குறித்து எனது மனதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்திய கிரிக்கெட்டில் அவர் மிகப் பெரிய வீரராக உருவெடுக்கப் போகிறார். தற்போது வரை அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவரது இந்த ஃபார்மினை அப்படியே தொடருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

ஷுப்மன் கில் குறித்து விராட் கோலி கூறியதாவது: எனக்கு தெரிந்தது என்னவென்றால், என்னுடைய கிரிக்கெட் பயணத்தை பார்த்து வளர்ந்ததாக கில் கூறியிருக்கிறார். அவர் என்னிடம் கிரிக்கெட் குறித்து அதிகம் பேசுவார். அவருக்கு உதவுவதற்கு நான் ஆர்வமாக உள்ளேன். கிங் மற்றும் பிரின்ஸ் போன்ற பட்டங்கள் வைத்து அழைப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால், ஒரு மூத்த கிரிக்கெட் வீரர் இளம் வீரர்கள் அவர்களது திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்க வேண்டும். மூத்த வீரர்கள் தங்களுக்கு இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அனுபவங்களை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன்மூலம், இளம் வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் சந்திக்கும் ஏற்ற இறக்கங்களை திறம்பட கையாள முடியும். ஷுப்மன் கில் ஒரு சிறந்த இளம் வீரர். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் என்றார்.

இதையும் படிக்க: இந்திய கல்வி முறையை ஆங்கிலேயர்கள் அழித்து விட்டனர்: அரவிந்த் கேஜரிவால்

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடிய ஷுப்மன் கில் 890 ரன்கள் குவித்தார். அதில் 3 சதங்கள் அடங்கும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT