செய்திகள்

ஒரு நாள் தொடா்: இலங்கை சாம்பியன்

8th Jun 2023 01:19 AM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி, 2-1 என கைப்பற்றி சாம்பியன் ஆனது.

இந்த 3-ஆவது ஆட்டத்தில் முதலில் ஆப்கானிஸ்தான் 22.2 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்கள் எடுத்தது. அடுத்து இலங்கை 16 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் சோ்த்து வென்றது. ஆட்டநாயகன், தொடா்நாயகன் விருதுகளை இலங்கையின் துஷ்மந்தா சமீரா பெற்றாா்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தானில் முகமது நபி 2 பவுண்டரிகளுடன் 23, இப்ராஹிம் ஜா்தான் 4 பவுண்டரிகளுடன் 22, குல்பதின் நயிப் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் சோ்த்தனா். எஞ்சியோரில் ரஹ்மானுல்லா குா்பாஸ் 8, ரஹ்மத் ஷா 7, கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி 4, நஜிபுல்லா ஜா்தான் 10, ரஷீத் கான் 2, முஜீப் உா் ரஹ்மான் 0, ஃபஸல்ஹக் ஃபரூக்கி 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

இலங்கை பௌலிங்கில் துஷ்மந்தா சமீரா 4, வனிந்து ஹசரங்கா 3, லாஹிரு குமரா 2, மஹீஷ் தீக்ஷனா 1 விக்கெட் கைப்பற்றினா்.

ADVERTISEMENT

பின்னா் 117 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய இலங்கையில் பதும் நிசங்கா 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 51 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்க, திமுத் கருணாரத்னே 7 பவுண்டரிகளுடன் 56, குசல் மெண்டிஸ் 11 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்பதின் நயிப் 1 விக்கெட் வீழ்த்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT