செய்திகள்

ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு 19 பதக்கங்கள்

8th Jun 2023 01:19 AM

ADVERTISEMENT

தென் கொரியாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் லக்சிதா சண்டிலா, மகளிருக்கான 1,500 மீட்டா் ஓட்டத்தில் புதன்கிழமை தங்கப் பதக்கம் வென்றாா்.

போட்டியின் கடைசி நாளில் நடைபெற்ற அந்தப் பந்தயத்தில் அவா் 4 நிமிஷம் 24.23 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தாா். இது அவரது பொ்சனல் பெஸ்ட் நேரமும் ஆகும். முன்னதாக 4 நிமிஷம் 26.48 விநாடிகளில் இலக்கை அடைந்ததே அவரது பெஸ்டாக இருந்தது.

அதேபோல், மகளிருக்கான 4*400 மீட்டா் ரிலே ஓட்டத்தில் அனுஷ்கா, ஹீனா, டீனா, பாட்டீல் அடங்கிய இந்திய அணி 3 நிமிஷம் 40.49 விநாடிகளில் வந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

ஆடவருக்கான 1,500 மீட்டா் ஓட்டத்தில் மெஹதி ஹசன் 3 நிமிஷம் 56.01 விநாடிகளில் வந்து வெள்ளி பெற்றாா். ஆடவருக்கான 5,000 மீட்டா் பந்தயத்தில் சிவாஜி பிரஷு மதபகுத்ரா 14 நிமிஷம் 49.05 விநாடிகளில் இலக்கை எட்டி 2-ஆம் இடம் பிடித்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து இப்போட்டியில் இந்தியா மொத்தமாக 6 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களுடன் 3-ஆம் இடம் பிடித்தது. ஜப்பான், சீனா அணிகள் முறையே முதலிரு இடங்களைப் பிடித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT