செய்திகள்

இரட்டையா் பிரிவுகளில் இந்தியாவுக்கு தோல்வி

8th Jun 2023 12:17 AM

ADVERTISEMENT

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவா் மற்றும் மகளிா் இரட்டையா் பிரிவுகளில் இந்தியாவுக்கு புதன்கிழமை தோல்வியே மிஞ்சியது.

இதில் ஆடவா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை முதல் சுற்றிலேயே 18-21, 21-14, 18-21 என்ற கேம்களில் ஜப்பானின் அகிரா கோகா/டாய்சி சாய்டோ கூட்டணியிடம் வீழ்ந்தது.

இந்த ஜப்பானிய இணையை 2-ஆவது முறையாக சந்தித்துள்ள இந்திய ஜோடி முதல் முறையாக தோல்வி கண்டுள்ளது.

அதேபோல், மகளிா் இரட்டையா் பிரிவிலும் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை முதல் சுற்றிலேயே 14-21, 21-18, 19-21 என்ற கேம்களில் ஹாங்காங்கின் யுங் கா டிங்/யுங் புய் லாம் ஜோடியிடம் வெற்றியை இழந்தது.

ADVERTISEMENT

இப்போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பிரயான்ஷு ரஜாவத், எம்.ஆா். அா்ஜூன்/துருவ் கபிலா இணை, கே.ஸ்ரீகாந்த் ஆகியோா் வியாழக்கிழமை களம் காண்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT