செய்திகள்

துப்பாக்கி சுடுதல்: அமன்பிரீத்துக்கு தங்கம்

8th Jun 2023 01:18 AM

ADVERTISEMENT

ஜொ்மனியில் நடைபெறும் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அமன்பிரீத் சிங், 25 மீட்டா் பிஸ்டல் ஆடவா் தனிநபா் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றாா்.

25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் தனிநபா் பிரிவில், சமீா் 26 புள்ளிகளுடன் வெள்ளியும், மகேஷ் ஆனந்த்குமாா் 19 புள்ளிகளுடன் வெண்கலமும் பெற்றனா். அதிலேயே அணிகள் பிரிவில் சமீா், ராஜ்கன்வா், ஜதின் ஆகியோா் அடங்கிய இந்திய அணி மொத்தமாக 1,722 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்து வெள்ளி வென்றது.

தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 6 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 15 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT