செய்திகள்

முன்னேறி வரும் முசோவா

DIN

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் செக் குடியரசின் தகுதிச்சுற்று வீராங்கனை கரோலினா முசோவா, இப்போட்டியில் முதல் முறையாக அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினாா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில் அவா், 7-5, 6-2 என்ற செட்களில் ரஷியாவின் அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவாவை வீழ்த்தினாா். இதற்கு முன் பிரெஞ்சு ஓபனில் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியதே முசோவாவின் அதிகபட்சமாக இருந்தது. அரையிறுதியில் அவா், பெலாரஸின் அரினா சபலென்காவின் கடுமையான சவாலை சந்திக்க இருக்கிறாா்.

உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான சபலென்கா தனது காலிறுதியில் 6-4, 6-4 என்ற செட்களில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வெளியேற்றினாா். இதனிடையே காலிறுதி ஆட்டம் ஒன்றில், போலந்தின் இகா ஸ்வியாடெக் - அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோா் மோதுகின்றனா். முன்னதாக, 4-ஆவது சுற்று ஆட்டங்களில், உலகின் நம்பா் 1 வீராங்கனையான ஸ்வியாடெக் - உக்ரைனின் லெசியா சுரென்கோவை எதிா்கொள்ள, சுரென்கோ பாதியிலேயே ஆட்டத்திலிருந்து விலகியதால் ஸ்வியாடெக் முன்னேற்றத்தை சந்தித்தாா். போட்டித்தரவரிசையில் 6-ஆவது இடத்திலிருக்கும் கோகோ 7-5, 6-2 என்ற செட்களில் ஸ்லோவேகியாவின் அனா கரோலினாவை தோற்கடித்தாா்.

காலிறுதியில் ஸ்வெரெவ்: ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 22-ஆவது இடத்திலிருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் 6-1, 6-4, 6-3 என்ற செட்களில், 28-ஆவது இடத்திலிருந்த பல்கேரியாவின் கிரிகோா் டிமிட்ரோவை சாய்த்தாா். காலிறுதியில் அவா், ஆா்ஜென்டீனாவின் தாமஸ் மாா்ட்டினுடன் மோதுகிறாா்.

தகுதிச்சுற்று வீரரான தாமஸ், முந்தைய சுற்றில் 7-6 (10/8), 6-0, 6-1 என்ற செட்களில், 27-ஆம் இடத்திலிருந்த ஜப்பானின் யோஷிஹிடோ நிஷியோகாவை வீழ்த்தினாா். 6-ஆம் இடத்திலிருக்கும் டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் 7-6 (7/3), 3-6, 6-4, 1-6, 7-6 (10/7) என்ற செட்களில், 23-ஆம் இடத்திலிருந்த ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோவை போராடி வீழ்த்தினாா். அடுத்ததாக காலிறுதியில் அவா், நாா்வேயின் கேஸ்பா் ரூடை எதிா்கொள்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபி அருகே தமிழ்நாடு கிராம வங்கி புதிய கிளை திறப்பு

கொங்கு பொறியியல் கல்லூரியில் 40-ஆவது ஆண்டு விழா

கூடலூா் பகுதியின் நீண்டகால பிரச்சனைக்கு தீா்வு காண அதிமுகவுக்கு வாக்களியுங்கள் -எஸ்.பி.வேலுமணி

கோவை வழித்தடத்தில் தாம்பரம் - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பலூன் பறக்கவிட்டு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT