செய்திகள்

டபிள்யுடிசி: முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா- 327/3 

7th Jun 2023 10:47 PM

ADVERTISEMENT

 

கிரிக்கெட் உலகில் சம பலம் பொருந்திய இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டம், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகியது. 

டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சிராஜின் பந்தில் டக்கவுட்டானார். பின்னர் ஜோடி சேர்ந்து ஆடிய வரனர் லபுசேன் விரைவிலே பிரிந்தது.  வார்னர் 43 ரன்களிலும் மார்னஸ் லபுஷேன் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி சதமடித்தார். 

76/3 ரன்கள் என்ற நிலையில் ஜோடி சேர்ந்த  ஸ்மித், டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடினார்கள். இந்திய அணியின் பௌலர்களை ஆதிக்கம் செலுத்த விடாமால் அற்புதமாக விளையாடினார்கள். ஹெட் அதிரடியாக விளையாட ஸ்மித் நிதானமாக விளையாடினார். 251 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். 

ADVERTISEMENT

இறுதி வரை ஆட்டமிழக்காமல் ஸ்மித் 95* (227) ரன்களும், டிராவிஸ் ஹெட் 146* (156) ரன்களும் எடுத்தனர். 

முதல்நாள் முடிவில் ஆஸி. அணி 85 ஓவர்கள் முடிவில் 327/3 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் ஷமி, சிராஜ், தாகுர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர். 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அஸ்வினை அணியில் எடுக்காதது குறித்து பலரும்  விமர்சித்து வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT