ஐசிசி சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம் லண்டனில் (நாளை) ஜூன் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பலம் வாய்ந்த ஆஸி. அணி முதன்முதலாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த டபிள்யுடிசி இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோற்று வெற்றி வாய்ப்பை இழந்தது இந்தியா.
இதையும் படிக்க: டபிள்யுடிசி இறுதிப் போட்டியில் அஸ்வின் விளையாடுவாரா? : ரோஹித் சர்மா பதில்!
ஓவல் மைதானம் சிறப்பானது. பௌலா்களுக்கு உதவியாக இருக்கும். அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதனால் இந்திய அணியில் அஸ்வின் அல்லது ஜடேஜா யார் ஒருவைரைத்தான் விளையாட வைக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: மீண்டும் டெஸ்ட் அணியில் மொயின் அலி?
இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு போட்டி துவங்குகிறது. முதல் செஷன் 3மணி முதல் 5வரைக்கும், இரண்டாவது செஷன் 5.40 முதல் 7.40 வரைக்கும், மூன்றாவது செஷன் இரவு 8மணி முதல் 10 மணி வரை நடைபெறுமென தகவல் வெளியாகியுள்ளது.
நேரலையாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் பார்த்துக் கொள்ளலாம். மேலும் டிடி ஸ்போர்ட்ஸில் இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.