செய்திகள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப்: டாப் 5 இந்திய பேட்டர்கள்!

6th Jun 2023 12:04 PM

ADVERTISEMENT

2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்டர்கள் பட்டியலில் புஜாரா முதலிடத்தில் உள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்துக்கு ஆஸ்திரேலியா-இந்திய அணிகள் தகுதி பெற்றுள்ளன. லண்டனின் ஓவல் மைதானத்தில் நாளை(ஜூன் 7 முதல் 11 வரை இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது. ரோஹித் சா்மா தலைமையில் இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.

கடந்த 2 ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில், புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற ஆஸி, இந்திய அணிகள் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன. டபிள்யுடிசியில் 11 வெற்றி, 3 தோல்வி, 5 டிரா, 66.67 புள்ளியுடன் ஆஸி.யும், 10 வெற்றி, 5 தோல்வி, 3 டிரா, 58.8 புள்ளியுடன் இந்தியாவுடம் தகுதி பெற்றன.

இதில் வெல்லும் அணி உலக டெஸ்ட் சாம்பியன் என்ற பட்டத்தை வெல்லும்.

ADVERTISEMENT

இந்நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்டர்கள் பட்டியலில் புஜாரா, கோலி, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா மற்றும் ஜடேஜா முறையே முதல் 5 இடங்களை பெற்றுள்ளனர்.

 

பெயர் மொத்த ரன்கள் இன்னிங்ஸ் சராசரி 100/50 அதிக ஸ்கோர்
புஜாரா 887 30 32.85 1/6 102*
விராட் கோலி 869 28 32.18 1/3 186
ரிஷப் பண்ட் 868 21 43.40 2/5 146
ரோஹித் சர்மா 700 17 43.75 2/2 127
ஜடேஜா 673 19 37.38 2/3 175*

 

ADVERTISEMENT
ADVERTISEMENT