செய்திகள்

டபிள்யுடிசி இறுதிப் போட்டியில் அஸ்வின் விளையாடுவாரா? : ரோஹித் சர்மா பதில்!

6th Jun 2023 04:22 PM

ADVERTISEMENT

 

ஐசிசி சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம் லண்டனில் (நாளை) ஜூன் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பலம் வாய்ந்த ஆஸி. அணி முதன்முதலாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த டபிள்யுடிசி இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோற்று வெற்றி வாய்ப்பை இழந்தது இந்தியா.

இதையும் படிக்க:  மீண்டும் டெஸ்ட் அணியில் மொயின் அலி? 

ஓவல் மைதானம் சிறப்பானது. பௌலா்களுக்கு உதவியாக இருக்கும். அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதனால் இந்திய அணியில் அஸ்வின் அல்லது ஜடேஜா யார் ஒருவைரைத்தான் விளையாட வைக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க:  டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கவலையாக உள்ளது: ஸ்டீவ் ஸ்மித்  

ஐசிசி டெஸ்ட் அணியில் சிறந்த பௌலராக (முதலிடத்தில்) அஸ்வின் உள்ளார். ஆல்ரவுண்டர் தரவரிசையிலும் 2வது இடத்தில் உள்ளார். 

இந்நிலையில் அஸ்வின் விளையாடுவார என பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது: 

அஸ்வின் விளையாடமாட்டார் என நான் கூறவில்லை. நாளை வரை நாம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் மைதானத்தின் தன்மை தினமும் மாறுகிறது. இன்று ஒருமாதிரி இருக்கிறது நாளை ஒருமாதிரி இருக்கிறது. அதனால் வீரர்களுக்கு நான் சொல்வது 15 பேரும் தயாராக இருங்கள் என்பதுதான். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT