செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கவலையாக உள்ளது: ஸ்டீவ் ஸ்மித்  

6th Jun 2023 03:16 PM

ADVERTISEMENT

 

96 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித் 8792 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 30 சதங்கள் 37 அரைசதங்கள் அடங்கும். ஐசிசி சிறந்த பேட்டர் வரிசையில் 3வது இடத்தில் உள்ளார். ஆஷஸ் தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். டான் பிராட்மேனுடன் ஒப்பிடும் அளவுக்கு திறமையான பேட்டர். 

இதையும் படிக்க: 2 வருட கடின உழைப்புதான் அவரை இங்கு கொண்டு வந்துள்ளது: ரஹானே குறித்து டிராவிட்! 

நாளை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்மித் முக்கியமான பங்களிப்பை அளிப்பார் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்து.  

ADVERTISEMENT

இதையும் படிக்க: டபிள்யுடிசி: இறுதிப் போட்டியில் அஸ்வின் அல்லது  ஜடேஜா?- முன்னாள் வீரர்கள் கருத்து! 

டி20 போட்டிகளின் அபார வளர்சியினால் டெஸ்ட் கிரிக்கெட் பாதிக்கப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில் ஆஸி. நட்சத்திர வீரர் ஸ்மித்தும் கவலை தெரிவித்துள்ளார். 

டெஸ்ட் போட்டி குறித்து ஸ்மித் கூறியதாவது: 

டெஸ்ட் கிரிக்கெட் குறித்து சிறிது கவலையாக இருக்கிறது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் நன்றாகவே இருக்கிறது. தற்போது நல்ல இடத்தில்தான் உள்ளது. சமீபத்தில் பார்த்த் சில போட்டிகள் அற்புதமாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட்டை நேசிப்பவர்கள் இருக்கும்வரை அனைத்து  கிரிக்கெட் வாரியங்களின் மனதிலும் இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ந்து இருக்கும். மேலும் இன்னும் சிறப்பான நாள்கள் வரும் என நம்புகிறேன். 

ADVERTISEMENT
ADVERTISEMENT