செய்திகள்

கற்றுக்கொள்வதில் ஆர்வம் உடையவர்; திறமைசாலி: கில் குறித்து விராட் கோலி! 

6th Jun 2023 09:23 PM

ADVERTISEMENT

 

ஐபஏல் 2016இல் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 973 ரன்கள் எடுத்து அசத்தினார். ஷுப்மன் கில் சாதனையை முறியடிக்காவிட்டாலும் இந்தாண்டு சிறப்பாக 890 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலும் அசத்திவரும் கில் டெஸ்டிலும் தொடக்க வீரராக கலக்கி வருகிறார். 

இதையும் படிக்க: பயிற்சியின்போது ரோஹித்துக்கு காயம்: நாளை விளையாடுவாரா? 

நாளை நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கில்லின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். விராட் கோலியை ரசிகர்கள் கிங் என்றும் கில்லை பிரின்ஸ் என்றும் அழைக்கின்றனர். 

ADVERTISEMENT

இதுகுறித்து விராட் கோலி கூறியதாவது: 

கிங், ப்ரின்ஸ் போன்ற பட்டப்பெயர்கள் எல்லாம் ரசிகர்கள் பார்வையில் சிறப்பனதாக இருக்கும். ஆனால் சீனியர் வீரர்களை பொருத்தவரை இளைஞர்களை முன்னேற்ற வேண்டும். தங்கள் கிரிக்கெட் வாழ்வில் கற்றதை அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். தொடர்ச்சியான கற்றலின் மூலம் நாட்டின் சிறந்த வீரராக கில் விளங்குவார். 

கில் அற்புதமான வீரர். அற்புதமாக விளையாடிவரும் அவர் இந்த ஃபார்மினை டெஸ்டிலும் தொடர வேண்டுகிறேன். கில் முன்னேற்றத்தில் உதவுகிறேன். அவரது பலத்தினை புரிந்து கொள்கிறேன். அவரை சுயமாக தன்முனைப்புடன் முன்னேறி வந்தவர். அவர் தொடர்ச்சியாக நன்றாக விளையாடினால் இந்திய அணிக்கு மிகவும் நல்லது. 

கில் அதிகமாக் கிரிக்கெட் பற்றி என்னிடம் பேசுவார். கற்றுக் கொள்வதில் அதிக விருப்பம் உடையவர். இந்த வயதில் சிறந்த திறமையினை வைத்துக் கொண்டுள்ளார். எங்களுக்குள் நல்ல பழக்கம் இருக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் மதிக்கிறோம். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT