செய்திகள்

டபிள்யுடிசி: இறுதிப் போட்டியிலிருந்து ஹேஸில்வுட் விலகல்!

5th Jun 2023 03:09 PM

ADVERTISEMENT

 

ஐசிசி சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம் லண்டனில் வரும் ஜூன் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பலம் வாய்ந்த ஆஸி. அணி முதன்முதலாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த டபிள்யுடிசி இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோற்று வெற்றி வாய்ப்பை இழந்தது இந்தியா.

ஓவல் மைதானம் சிறப்பானது. பௌலா்களுக்கு உதவியாக இருக்கும். அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். டபிள்யுடிசிக்கு அடுத்து முக்கியமான ஆஷஸ் தொடர் ஜூன் 16இல் தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா மோதும். இதற்காக இங்கிலாந்து வீரர்கள் கடுமையாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.

இதையும் படிக்க: தற்போது காயம் எப்படி இருக்கிறது?: பென் ஸ்டோக்ஸ் கூறிய தகவல்! 

ADVERTISEMENT

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேஸில்வுட் விலகியுள்ளார். 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஹேஸில்வுட்  222 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். 

தேர்வுக்குழு தலைவர் ஜியார்ஜ் பெய்லி கூறியதாவது: 

ஜோஸ் ஹேஸில்வுட் விளையாடுவதற்கு பச்சைக்கொடி காட்டுவதாகதான் இருந்தார். ஆனால் அடுத்துவரும் ஆஷஸ் தொடரினையும் விழிப்புணர்வோடு அணுக வேண்டியுள்ளது. 6 டெஸ்ட் போட்டிகள் 7 வாரத்திற்குள் நடக்கவிருக்கிறது. அதற்கு எங்களது வேகப் பந்து வீச்சாளர்கள் தயராக வேண்டும். எட்ஜ்பாஸ்டனில் நடக்கவிருக்கும் போட்டிக்கு தயாராக ஹேஸில்வுட்க்கு இது சரியான கால அவகாசமாக இருக்கும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT