செய்திகள்

டபிள்யுடிசி: இறுதிப் போட்டியில் அஸ்வின் அல்லது  ஜடேஜா?- முன்னாள் வீரர்கள் கருத்து! 

5th Jun 2023 04:25 PM

ADVERTISEMENT

 

ஐசிசி சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம் லண்டனில் வரும் ஜூன் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பலம் வாய்ந்த ஆஸி. அணி முதன்முதலாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த டபிள்யுடிசி இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோற்று வெற்றி வாய்ப்பை இழந்தது இந்தியா.

ஓவல் மைதானம் சிறப்பானது. பௌலா்களுக்கு உதவியாக இருக்கும். அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதனால் இந்திய அணியில் அஸ்வின் அல்லது ஜடேஜா யார் ஒருவைரைத்தான் விளையாட வைக்க வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதையும் படிக்க: சர்வதேச கிரிக்கெட்டில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த அஸ்வின்! 

ADVERTISEMENT

இந்நிலையில், முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோர் இருவரையும் தேர்வு செய்யலாமென கூறியுள்ளனர். 

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் ஜடேஜா, அஸ்வின் முன்னிலை. 

இதையும் படிக்க: டபிள்யுடிசி: இறுதிப் போட்டியிலிருந்து ஹேஸில்வுட் விலகல்!

கவாஸ்கர் கூறியது: ரோஹித், கில் தொடக்க வீரர்களாகவும், 3வது புஜாரா, 4வது கோலி, 5வது ரஹானே. 6வது பரத் அல்லது இஷான் கிஷான். 7,8 நிச்சயமாக அஸ்வின், ஜடேஜா இருக்க வேண்டும். 9,10,11 முறையே ஷர்துல், ஷமி, சிராஜ் இருந்தால் நன்றாக இருக்கும். 

ரிக்கி பாண்டிங் கூறியது: என்னைப் பொறுத்தவரை அஸ்வின், ஜடேஜா இருவரையும் எடுக்க வேண்டும். இந்தியா அப்படித்தான் தேர்வு செய்யுமென நினைக்கிறேன். ஜடேஜாவை பேட்டிங்காக மட்டுமேகூட எடுக்கலாம். தேவைப்பட்டால் பௌலிங் உபயோகித்துக் கொள்ளலாம். அஸ்வின் சிறந்த பௌலராக உள்ளார். அவரை நிச்சயமாக தேர்வு செய்ய வேண்டும். ஷர்துல் எடுத்தால் இன்னும் பேட்டிங் வலுவாக இருக்கும். 

உத்தேச அணி: ரோஹித், கில், புஜாரா, கோலி, ரஹானே, பரத், ஜடேஜா, அஸ்வின், தாகுர், ஷமி, சிராஜ். 

ADVERTISEMENT
ADVERTISEMENT