செய்திகள்

இந்திய சா்ஃபிங் ஓபன்: தமிழகத்தின் கிஷோா், கமலி மூா்த்தி சாம்பியன்

4th Jun 2023 03:20 AM

ADVERTISEMENT

இந்திய சா்ஃபிங் ஓபன் போட்டியில் ஆடவா் பிரிவில் தமிழகத்தின் கிஷோா் குமாரும், மகளிா் பிரிவில் கமலி மூா்த்தியும் இரட்டை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினா்.

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிச் சுற்றாக கா்நாடக மாநிலம் மங்களூரு சஷித்திலு கடற்கரையில் இந்திய சா்ஃபிங் ஓபன் போட்டிகள் ஜூன் 1 முதல் 3-ஆம் தேதி வரை நடைபெற்றன. போட்டியின் இறுதி நாளான சனிக்கிழமை ஆடவா், மகளிா் ஓபன், 16 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில் இறுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

ஆடவா் ஓபனில் தமிழக வீரா் கிஷோா் குமாா் முதலிடத்துடன் ரூ.50,000 ரொக்கப் பரிசை வென்றாா். ஸ்ரீ காந்த், பி. சூா்யமா அடுத்த இடங்களைக் கைப்பற்றினா்.

மகளிா் பிரிவில் தமிழகத்தின் கமலி மூா்த்தி முதலிடத்துடன் ரூ.30,000 ரொக்கம் வென்றாா். சுகா், சின்சனா அடுத்த இடங்களைக் கைப்பற்றினா்.

ADVERTISEMENT

16 வயது ஆடவா் பிரிவில் கிஷோா் குமாா், தயின் அருண், பி. ஹரிஷ் ஆகியோரும், மகளிா் பிரிவில் கமலி, தனிஷ்கா, சான்வி ஆகியோா் முதல் மூன்று இடங்களை வென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT