செய்திகள்

கிரிக்கெட் வீரர்களின் நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டின் ஆதிக்கத்தை மாற்றிய ஐபிஎல்: பாட் கம்மின்ஸ்

DIN

கிரிக்கெட் வீரர்கள் நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் செலுத்திய ஆதிக்கத்தை ஐபிஎல் முடுவுக்கு கொண்டுவந்துள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்களில் இருந்து அவர்களது நாட்டுக்காக விளையாடுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வைப்பது மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது எனவும் தெரிவித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற ஜூன் 7 முதல் தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசியதாவது: கடந்த காலங்களில் கிரிக்கெட் வீரர்களின் நேரத்தில் சர்வதேச கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தியது போல் தற்போது இல்லை. அந்த நிலையை 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஐபிஎல் மாற்றிவிட்டது. ஆனால், நாம் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நாட்டுக்காக விளையாடுவதை மற்ற போட்டிகளைக் காட்டிலும் பெரிதாக நினைக்க வேண்டும். ஏனென்றால், அது அவர்கள் நாட்டுக்கு செய்யும் கடமையாகும். ஆஸ்திரேலியாவுக்காக வீரர்கள் அதிக அளவில் விளையாடுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், அது மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. நாம் இது குறித்து ஆழமாக யோசிக்க வேண்டும்.

நாட்டுக்காக விளையாடுவதைத் தவிர மற்ற போட்டிகளில் விளையாடும் வீரர்களை நாம் குறை கூற முடியாது. ஒரு நாள் வீரர்கள் விடுவிக்கப்படுவார்கள். அதுதான் எதார்த்தம். மற்ற விளையாட்டுகளிலும் இதனைக் காண முடியும். அப்படி விடுவிக்கப்படும் வீரர்களை அதிகமாக ஆஸ்திரேலியாவுக்காக ஆட வைக்க வேண்டும். உலகக் கோப்பை மற்றும் பல முக்கியத் தொடர்களில் வெற்றியை பெற்றுத் தருவதற்கான சிறந்த வீரர்களுக்கான தேவை நமக்கு இருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT