செய்திகள்

ரோஹித் சர்மாவிடம் கற்றுக் கொண்டதை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் செயல்படுத்துவேன்: கேமரூன் கிரீன்

4th Jun 2023 11:45 AM

ADVERTISEMENT

ரோஹித் சர்மாவின் அமைதியாக செயல்படும் திறனை தன்னுடைய ஆட்டத்தில் கொண்டுவர முடியும் என நம்புவதாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 முதல் நடைபெறவுள்ள நிலையில் ஐசிசிக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார். 

இதையும் படிக்க: தந்தையின் குடிப்பழக்கத்தை கைவிட கடிதம் எழுதி தற்கொலை செய்து கொண்ட மகள்!

ஐசிசிக்கு கேமரூன் கிரீன் அளித்த பேட்டியில் கூறியதாவது: போட்டி நடைபெறும்போது ரோஹித் சர்மாவிடம் உள்ள அமைதி நம்மை ஆச்சர்யமடைய வைக்கும். இதனை அவர் கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறார். அவருடன் இணைந்து விளையாடியது சிறப்பான அனுபவமாக இருந்தது. மும்பை அணிக்காக விளையாடும்போது என்னுடைய வேலை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே ஆகும். அதனையே நான் செயல்படுத்தினேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு விராட் கோலி மிகப் பெரிய ஆபத்தாக இருக்கப்போவதாக நான் நம்புகிறேன். அவர் எப்போதும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துபவர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முக்கியமான போட்டியாகும். அதற்காக நான் காத்திருக்கிறேன். டி20 போட்டியிலிருந்து டெஸ்ட் போட்டிக்கு  ஏற்றவாறு எனது பேட்டிங்கை மாற்றிக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கப் போவது கிடையாது. டெஸ்ட் போட்டியினைப் போன்று சிறப்பான ஆட்டம் கிடையாது என்றார்.

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடிய கிரீன் 452 ரன்கள் குவித்தார். மேலும், மும்பை அணிக்காக 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருடைய சிறப்பான பேட்டிங் அணிக்கு பலமாக அமைந்தது.

இதையும் படிக்க: ஒடிசா விபத்துக்கான காரணம் தெரிந்தது! ஜூன் 6 முதல் மீண்டும் ரயில் சேவை!!

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனின் ஓவலில் வருகிற ஜூன் 7 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT