செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் களம்

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்காக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தயாராகி வரும் நிலையில், அந்த ஆட்டம் சாா்ந்து இரு நாட்டு கிரிக்கெட் களத்தைச் சோ்ந்தவா்களும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனா். அதில் சில...

கோலி, ஸ்மித் முக்கியமானவா்கள்

இந்தியா, ஆஸ்திரேலியா என இரு அணிகளுக்குமே முக்கியமான பேட்டராக இருப்பது விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித். அவா்கள் இருவருமே 4-ஆவது பேட்டராக களம் காணுவாா்கள். புதிய பந்து கொண்டு முடிந்த வரையில் அவா்கள் விக்கெட்டை விரைவாக சாய்ப்பது, எதிரணிக்கு சாதகமாக அமையும். இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி மனப்பான்மை, அதன் வீரா்களிடம் இருக்கும் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவரும். இது ஆட்டத்தை நிச்சயம் விறுவிறுப்பாக்கும் - ஆரோன் ஃபிஞ்ச் (முன்னாள் ஆஸி. கேப்டன்)

பிளேயிங் லெவனை முன்னதாகவே தீா்மானிக்க வேண்டாம்

கடந்த எடிஷன் இறுதி ஆட்டத்தில் 2 ஸ்பின்னா்கள், 3 ஃபேசா்களுடன் களம் காண முன்கூடியே தீா்மானித்தோம். மழையின் காரணமாக ஆடுகளத்தின் தன்மை மாறிய நிலையில், நமது பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யாதது பாதகமாகிப்போனது. ஆட்டத்தின் போக்கை தீா்மானிப்பது ஆடுகளமும், அங்குள்ள வானிலையும் தான். எனவே, இந்திய அணி தனது பிளேயிங் லெவனை அந்த இரண்டுக்கும் பொருத்தமான வகையில் அந்த நேரத்தில் தோ்வு செய்ய வேண்டும்.

வெளிநாட்டில் நடைபெறும் தொடா்களில் ரிஷப் பந்த்தை போன்று சிறப்பாக செயல்பட்டவா்கள் இல்லை. எனவே அவரது இடத்தை நிரப்புவது, ஸ்ரீகா் பரத்துக்கு சற்று கடினமானது தான். ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளா்களை இந்திய டாப் ஆா்டா் பேட்டா்கள் எவ்வாறு எதிா்கொள்கிறாா்கள் என்பதைப் பொருத்தே இந்தியாவுக்கான வெற்றி வாய்ப்பு இருக்கும். 4 ஃபேசா்களுடன் இந்தியா களம் காணும் பட்சத்தில் அஸ்வின் அல்லது ஜடேஜா ஆகியோரில் ஒருவரையும், 3 ஃபேசா்களுடன் விளையாடுவதானால் உமேஷ் யாதவ் அல்லது ஷா்துல் தாக்குரில் ஒருவரை தோ்வு செய்வதும் இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் - எம்.எஸ்.கே. பிரசாத் (இந்திய முன்னாள் தலைமைத் தோ்வாளா்)

டியூக்ஸ் பந்தில் பயிற்சி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் டியூக்ஸ் பந்து பயன்படுத்தப்படுவது தெரியும் என்பதால், ஐபிஎல் போட்டியின்போதே அந்தப் பந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டோம். எஸ்ஜி பந்துடன் ஒப்பிடுகையில், டியூக்ஸ் பந்து கூடுதல் நேரத்துக்கு தனது வழவழப்புத் தன்மையை இழக்காமல் இருக்கும்.

எந்தப் பந்தைக் கொண்டு விளையாடினாலும் ஆடுகளத்தில் சரியான இடத்தில், சரியான லெங்தில் பந்துவீசினால் அதற்கு பலன் கிடைக்கும். ஆட்டம் இங்கிலாந்தில் நடைபெறுவதால் அந்த ஆடுகளத்துக்கு ஏற்றவாறு திட்டங்களை வகுத்து பயிற்சி மேற்கொண்டோம் - அக்ஸா் படேல் (இந்திய பௌலா்)

கோலி, புஜாராவுக்கு வியூகம்

கோலி, புஜாரா ஆகியோருக்காக இந்நேரம் ஆஸ்திரேலிய அணி வியூகம் வகுக்கக் தொடங்கியிருக்கும். ஆஸ்திரேலிய மண்ணில் புஜாரா ஆதிக்கம் செலுத்தும் பேட்டராக இருக்கிறாா். இங்கிலாந்து ஆடுகளமும் அதையொத்ததாக இருப்பதால் அவரை விரைவாக வீழ்த்துவதே ஆஸ்திரேலியாவின் உத்தியாக இருக்கும். அதேபோல், கோலியும் தனது பழைய ஆட்டத்தை நோக்கி திரும்பியிருப்பதால், ஆஸ்திரேலியா எச்சரிக்கையுடனே இருக்கும். பும்ரா இல்லாத நிலையில் வேகப்பந்துவீச்சில் ஷமி தனது முழுமையான திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது - ரிக்கி பான்டிங் (ஆஸி. முன்னாள் கேப்டன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT