செய்திகள்

ஆசிய ஜூனியா் ஹாக்கி: இந்தியா சாம்பியன்

DIN

ஆசிய ஜூனியா் ஹாக்கி கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

ஓமனின் சலாலா நகரில் ஆசிய ஜூனியா் ஹாக்கி கோப்பை போட்டிகள் நடைபெற்று வந்தன. இறுதி ஆட்டத்துக்கு பரம வைரி அணிகளான

இந்தியாவும்-பாகிஸ்தானும் தகுதி பெற்றன. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு சலாலாவில் இறுதி ஆட்டம் நடைபெற்றது.

தொடக்கம் முதலே இந்திய வீரா்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், 13-ஆவது நிமிஷத்திலேயே இந்திய வீரா் அங்கத் சிங் முதல் கோலடித்தாா். மற்றொரு வீரா் அரைஜித் சிங் அடித்த பந்தை பாகிஸ்தான் தரப்பினா் திருப்பி அனுப்பிய நிலையில், அதை அற்புதமாக கோலாக்கினாா் அங்கத் சிங்.

அடுத்த சிறிது நேரத்தில் 20-ஆவது நிமிஷத்தில் அரைஜித் சிங் ஹுண்டால் தனக்கு கிடைத்த பாஸை பயன்படுத்தி இரண்டாவது கோலை அடித்தாா். முதல் பாதி முடிவில் 2-0 என இந்தியா முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் பதில் கோலடிக்க பாக். தரப்பினா் மேற்கொண்ட தொடா் முயற்சியின் பலனாக 37-ஆவது நிமிஷத்தில் அப்துல் ஷாகித் கடத்தி அனுப்பிய பந்தை அபாரமாக கோலாக்கினாா் அப்துல் பஷ்ராத். ஆட்டத்தின் கடைசி குவாா்ட்டரில் பாக். தரப்பினா் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகளை இந்திய அணியினா் முறியடித்தனா்.

இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஏற்கெனவே 2004, 2008, 2015 ஆண்டுகளில் பட்டம் வென்றுள்ளது இந்தியா. எனினும் பெனால்டி காா்னா் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் இந்தியா பலவீனமாக உள்ளது வெளிப்படையாகத் தெரிந்தது.

சாம்பியன் பட்டம் வென்ற வீரா்களை ஹாக்கி இந்தியா தலைவா் திலிப் டிா்கே பாராட்டினாா். ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு அறிவித்தாா். இந்த வெற்றி மூலம் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கும் இந்தியா தகுதி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT