செய்திகள்

மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் மன வேதனை அளிக்கிறது: 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணி!

2nd Jun 2023 06:51 PM

ADVERTISEMENT

மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதத்தால் மிகுந்த மன வேதனையில் இருப்பதாக 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர், வீராங்கனைகள் யாரும் தங்களது கடின உழைப்பினால் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசும் அவசர முடிவை எடுக்க வேண்டாம் எனவும், உங்களது குறைகள் அனைத்தும் விரைவில் தீர்த்து வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: கோவாவின் முதல் வந்தே பாரத் ரயில்: நாளை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி!

பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் மற்றும் சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர் வீராங்கனைகள் முன்னாள் மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை முன்வைத்து அவரை கைது செய்ய வலியுறுத்தி தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர்கள் தங்களது கடின உழைப்பை வெளிப்படுத்திய வென்ற அவர்களது பதக்கங்களை கங்கையில் வீசுவது என்று முடிவெடுத்தார்கள். அவா்களைத் தடுத்து நிறுத்திய விவசாய சங்கத்தினா் இந்தப் பிரச்னைக்கு ஐந்து நாள்களில் தீா்வு காண்பதாக கூறி பதக்கங்களை வாங்கிச் சென்றனா். 

ADVERTISEMENT

இந்திய மல்யுத்த வீரா்கள் மீது தில்லி போலீஸாா் தள்ளுமுள்ளு செய்து மேற்கொண்ட கைது நடவடிக்கைக்கு கண்டனம் சா்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்து, அவா்களின் குற்றச்சாட்டு குறித்து பாரபட்சமற்ற விசாரணையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவித்தது. 

இதையும் படிக்க: புதிய நாடாளுமன்றம் பாஜக அலுவலகம்போல வடிவமைக்கப்பட்டுள்ளது: சு.வெங்கடேசன் எம்.பி.

இந்த நிலையில்,  மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதத்தால் மிகுந்த மன வேதனையில் இருப்பதாக 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம் எங்களை மிகுந்த மனவருத்தத்துக்கு ஆளாக்கியுள்ளது. அவர்கள் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்படும் விதம் வேதனையளிக்கிறது. மல்யுத்த வீரர்கள் தங்களது கடின உழைப்பால் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசு முடிவெடுத்தது குறித்தும் எங்களுக்கு கவலையாக உள்ளது. அந்தப் பதக்கங்களை அவர்களது பல ஆண்டு உழைப்பு, உறுதி மற்றும் தியாகம் அவர்களுக்கு பெற்றுத் தந்துள்ளது. அந்த பதக்கங்கள் அவர்களது மட்டுமல்ல. அவை நாட்டின் பெருமை மற்றும் மகிழ்ச்சி. இந்த விவகாரத்தில் மல்யுத்த வீரர்கள்  அவசரப்பட்டு பதக்கங்களை கங்கையில் வீச வேண்டாம் என வலியுறுத்துகிறோம். சட்டப்படி அனைத்து விஷயங்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT