செய்திகள்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியிலிருந்து ரஷித் கான் விலகல்!

1st Jun 2023 03:49 PM

ADVERTISEMENT

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷித் கான் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் முடிவடைந்து வெளிநாட்டு வீரர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பிய நிலையில், பல்வேறு சர்வதேச போட்டிகள் தொடங்கவுள்ளன.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி நாளைமுதல் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கவுள்ளன. மொத்தம் மூன்று ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணி, தொடர்ந்து வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ரஷித் கான், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகுவதாகவும், கடைசி ஒருநாள் போட்டியில் பங்கேற்பார் என்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ரஷித் கான், மொத்தம் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி டாப்-3 பவுலர்கள் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT