செய்திகள்

மும்பையில் தோனிக்கு அறுவை சிகிச்சை நிறைவு!

1st Jun 2023 08:00 PM

ADVERTISEMENT

மும்பை மருத்துவமனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு அறுவை சிகிச்சை நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை 5-வது முறையாக வென்றது.

சென்னை அணி கேப்டன் தோனி இந்த சீசன் முழுவதும் முழங்கால் வலியுடன் விளையாடி வந்தார். போட்டிகளில் பேட்டிங் செய்யும்போது ரன் எடுக்க ஓடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார்.

இந்நிலையில், இறுதிப் போட்டி முடிவடைந்தவுடன் புதன்கிழமை மும்பை சென்ற தோனி, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை உறுதி செய்துள்ள சென்னை அணியின் நிர்வாகி ஒருவர், “அறுவை சிகிச்சைக்கு பிறகு தோனி நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாள்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT