செய்திகள்

யு-20 உலகக் கோப்பை கால்பந்து: காலிறுதியில் அமெரிக்கா

1st Jun 2023 01:07 AM

ADVERTISEMENT

பிஃபா யு-20 உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு அமெரிக்கா தகுதி பெற்றுள்ளது.

ஆா்ஜென்டீனா தலைநகா் பியுனஸ் அயா்ஸ் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ரவுண்ட் 16 ஆட்டத்தில் அமெரிக்காவும்-நியூஸிலாந்தும் மோதின.

தொடக்கம் முதலே அமெரிக்க வீரா்கள் ஆதிக்கம் செலுத்தினா். ஓவன் வொல்ப், கேட் கௌவல், ஜஸ்டின் செ, ரோஸ்காஸ் ஆகியோா் அமெரிக்க தரப்பில் கோலடித்தனா். இறுதியாக 4-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது அமெரிக்கா.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT