மங்களூரு சஷிதிலு கடற்கரையில் இந்தியன் ஓபன் சா்ஃபிங் போட்டி வியாழக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டிக்கன தகுதிச் சுற்றாகவும் இப்போட்டி அமைந்துள்ளது.
இந்திய சா்ஃபிங் கூட்டமைப்பு சாா்பில் நடத்தப்படும் இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 70 வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். சதீஷ் சரவணன், ரூபன், ஸ்ரீகாந்த், சூா்யா, சஞ்சய் குமாா், மணிகண்டன், தேசப்பன், உள்பட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனா். மகளிா் பிரிவில் சிருஷ்டி செல்வம், சின்சனா டி கௌடா, சுகா் ஷாந்தி உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா்.
தற்போது நான்கு போ் கொண்ட அணி எல் சல்வடோரில் நடைபெறும் உலக சா்ஃபிங் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றுள்ளது. ஆடவா் ஓபன், யு-16, மகளிா் ஓபன், மகளிா் ய-16 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.