கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் இறுதிப் போட்டியில், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் முதல்முறையாக பட்டம் வென்றார்.
இதையும் படிக்க: 23 வயதில் 236 விக்கெட்டுகள்: ஷாஹீன் ஷா அப்ரிடி அசத்தல்!
ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன், ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஜோகோவிச் (36), அல்கராஸ் (20) இடையே 16 வயது வித்தியாசம் இருக்கும் நிலையில், கடந்த 50 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் மோதிய வீரா்களின் அதிகபட்ச வயது வித்தியாசம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பான இறுதிப் போட்டியில் 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி விம்பிள்டனில் முதல்முறையாக சாம்பியனானார் அல்கராஸ். இது அவருக்கு 2வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.
இதையும் படிக்க: ஆர்சிபி அணிக்காக 140 போட்டிகள் விளையாடியுள்ளேன்; ஆனால்... : வேதனையை பகிர்ந்த சஹால்!
போட்டி முடிந்த பிறகு ஜோகோவிச் கூறியதாவது:
எனது டென்னிஸ் வாழ்க்கையில் பல அற்புதமான போட்டிகளை விளையாடி உள்ளதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். நான் சிறந்த வீரரிடம்தான் தோல்வியுற்றுள்ளேன். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் அடுத்தப் போட்டிக்கு இன்னும் வலுவாக தயாரக வேண்டும்.
காா்லோஸ் அல்கராஸ் மற்றும் அவரது அணியினரையும் நான் பாராட்டுகிறேன். இறுதிக் கட்டத்தில் அருமையாக விளையாடினார் கார்லோஸ். சர்வ்ஸ் ஒவ்வொன்றும் சிறப்பாக இருந்தது. அல்கராஸுக்கு பொருத்தமான வெற்றி.
என்னைப் பொறுத்தவரை இதுமாதிரி தோற்க விரும்பமாட்டேன். இந்த ஆடுகளத்தில் பல போட்டிகளில் த்ரில் வெற்றி பெற்றுள்ளேன். சில போட்டிகளில் தோல்விகளும். இங்கு நான் தோல்வியடைந்திருக்க வேண்டிய சில இறுதிப் போட்டிகளில் வென்றது போல தற்போது தோற்பதும்தான் சமநிலையாக இருக்குமென நினைக்கிறேன்.
எனது தோல்விக்குப் பிறகும் எனது மகன் சிரிப்புடன் இங்கிருப்பது பார்க்க அழகாக இருக்கிறது. எனக்கு ஆதரவளித்த எனது குடும்பத்திற்கு பெரிய அன்பும் அரவணைப்பும். ஒருவரையொருவர் காதலிப்போம் என்றார் ஜோகோவிச்.