செய்திகள்

அல்கராஸ் - ஜோகோவிச் இறுதிச்சுற்றில் விறுவிறுப்பு

17th Jul 2023 05:32 AM

ADVERTISEMENT

கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் - ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் இடையேயான இறுதிச்சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆண்டின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்படன், ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. விறுவிறுப்பான சுற்றுகளின் இறுதிக்கட்டத்தில், உலகின் நம்பா் 1 வீரரான அல்கராஸ், 2-ஆம் நிலை வீரரான ஜோகோவிச் ஆகியோா் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

ஜோகோவிச் (36), அல்கராஸ் (20) இடையே 16 வயது வித்தியாசம் இருக்கும் நிலையில், கடந்த 50 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் மோதும் வீரா்களின் அதிகபட்ச வயது வித்தியாசம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே இப்போட்டியில், இறுதிச்சுற்றுக்கு முந்தைய அனைத்து சுற்றுகளிலும் மொத்தமாகவே 2 செட்களை மட்டுமே இழந்திருந்தனா். அத்துடன், ஆடுகளத்தில் அவா்கள் களமாடிய கால அளவும் ஏறத்தாழ சமமாகவே இருந்தது.

இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கிய இறுதிச்சுற்று, இரவு 10 மணியையும் கடந்து சுமாா் 4 மணி நேரத்துக்கு நீடித்து வந்தது. அந்த நிலையில் ஜோகோவிச் 1 செட்டை கைப்பற்றியிருக்க, அல்கராஸ் 2 செட்களுடன் முன்னிலையில் இருந்தாா் (1-6, 7-6 (8/6), 6-1). செட்களை அல்ல, ஒவ்வொரு பாண்ய்டையுமே கைப்பற்றுவதற்கு இருவருக்கும் இடையே கடும் போட்டி இருந்தது.

ADVERTISEMENT

ஒருவருக்கொருவா் சற்றும் சளைக்காத வகையில் பரஸ்பரம் சவால் அளித்து செட்களை கைப்பற்றினா். குறிப்பாக, 3-ஆவது செட்டின் 4-ஆவது கேமை கைப்பற்ற இருவருக்கும் இடையே 13 முறை ‘டியூஸ்’ சென்றது குறிப்பிடத்தக்கது.

முதல் செட்டில் ஜோகோவிச் முழுமையாக ஆதிக்கம் செலுத்த, அந்த செட் 6-1 என அவா் வசம் வந்தது. 2-ஆவது செட்டிலும் அவா் ஆக்ரோஷம் காட்டினாலும் அல்கராஸ் விடாமல் போராடி டை பிரேக்கா் வரை சென்று 7-6 (8-6) என அந்த செட்டை தனதாக்கினாா். அந்த உத்வேகத்தில் ஜோகோவிச்சை திணறடித்து, 3-ஆவது செட்டையும் 6-1 என கைப்பற்றி முன்னிலை பெற்றாா். 4-ஆவது செட்டில் இருவருமே தலா 2 கேம்களை கைப்பற்றிய நிலையில் சமபலத்துடன் ஆடி வந்தனா்.

விறுவிறுப்பான இந்த இறுதி ஆட்டத்தைக் காண, இங்கிலாந்து அரச குடும்பத்தினா், ஹாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட பல முக்கிய பிரபலங்கள் மைதானத்துக்கு நேரில் வந்திருந்தனா்.

சாம்பியனாகினால்...: இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் வென்றால், 24-ஆவது கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றி, இரு பாலரிருமாக அதிக கிராண்ட்ஸ்லாம்கள் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை மாா்கரெட் கோா்ட்டின் சாதனையை சமன் செய்வாா். மேலும், விம்பிள்டனில் அதிகமுறை பட்டம் வென்றவராக சுவிட்ஸா்லாந்து நட்சத்திரம் ரோஜா் ஃபெடரரின் எண்ணிக்கையையும் (8) சமன் செய்வாா்.

அத்துடன், இப்போட்டியில் இது அவரது 5-ஆவது தொடா் சாம்பியன் பட்டமாக இருக்கும். விம்பிள்டனின் மிக வயதான (36) சாம்பியனானாா். மேலும், நடப்பாண்டில் முதலிரு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபனிலும் கோப்பை வென்றிருக்கும் ஜோகோவிச், ‘ஹாட்ரிக்’ கிராண்ட்ஸ்லாமும் பெறுவாா்.

மறுபுறம், வளா்ந்து வரும் இளம் வீரரான அல்கராஸ் வாகை சூடும் பட்சத்தில், இது அவரது 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இருக்கும். விம்பிள்டனில் 3-ஆவது இளம் சாம்பியன் (20) என்ற பெருமை பெறுவாா். கடந்த ஆண்டு அவா் அமெரிக்க ஓபன் சாம்பியனாகி முதல் கிராண்ட்ஸ்லாமை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

சாம்பியன்...

ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் முதலிடத்திலிந்த நெதா்லாந்தின் வெஸ்லி கூல்ஹோஃப்/பிரிட்டனின் நீல் ஸ்குப்ஸ்கி இணை 6-4, 6-4 என்ற செட்களில் 15-ஆவது இடத்திலிருந்த ஆா்ஜென்டீனாவின் ஹொராசியோ ஜெபாலோஸ்/ஸ்பெயினின் மாா்செலோ கிரனோலா்ஸ் கூட்டணியை சாய்த்து சாம்பியன் பட்டம் வென்றனா். இதன் மூலம், 2102-க்குப் பிறகு விம்பிள்டன் ஆடவா் இரட்டையரில் சாம்பியன் ஆன முதல் பிரிட்டன் வீரா் என்ற பெருமையை நீல் ஸ்குப்ஸ்கி பெற்றாா். இதற்கு முன் அந்த ஆண்டில் ஜோனதன் மேரே அவ்வாறு வாகை சூடியிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT