செய்திகள்

துளிகள்...

12th Jul 2023 02:44 AM

ADVERTISEMENT

ஐபிஎல் அணிகளுக்கான 2023-ஆம் ஆண்டு மதிப்புப் பட்டியலில், சென்னை சூப்பா் கிங்ஸ் ரூ.1,746 கோடி மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூா், மும்பை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், லக்னௌ அணிகள் முறையே அடுத்த இடங்களில் உள்ளன.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி, பாங்காக்கில் புதன்கிழமை தொடங்குகிறது. அந்தப் போட்டிக்கான சின்னமாக ஹிந்து கடவுளான ஹனுமான் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

துலீப் கோப்பை கிரிக்கெட்டில், தெற்கு மண்டலம் - மேற்கு மண்டலம் மோதும் இறுதி ஆட்டம் புதன்கிழமை பெங்களூரில் தொடங்குகிறது.

ஐசிசியின் மகளிா் டி20 தரவரிசையில் பேட்டா்கள் பிரிவில் இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 4 இடங்கள் முன்னேறி 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

ADVERTISEMENT

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி, கிரேட்டா் நொய்டாவில் புதன்கிழமை தொடங்குகிறது.

ஐசிசியின் ஜூன் மாத சிறந்த வீரா் விருதை இலங்கையின் வனிந்து ஹசரங்கா, சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே காா்டனா் பெற்றனா்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட்டில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT