செய்திகள்

முதல் டெஸ்டில் விளையாடவில்லை: உறுதி செய்த ஆஸி. பிரபலம்!

31st Jan 2023 11:58 AM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாட முடியாத சூழலை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல ஆஸி. வேகப்பந்து வீச்சாளார் மிட்செல் ஸ்டார்க்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9 முதல் தொடங்குகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க்கின் இடக்கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அத்தொடரின் கடைசி ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. 

ADVERTISEMENT

இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்டில் ஸ்டார்க் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய ஸ்டார்க், நான் குணமாகிக் கொண்டு வருகிறேன். இன்னும் சில வாரங்கள் தேவைப்படுகின்றன. முதல் டெஸ்டில் நாங்கள் வெல்வோம் என எண்ணுகிறேம். அணி வீரர்களை (2-வது டெஸ்ட் நடைபெறும்) தில்லியில் சந்திக்கிறேன் என்றார். 

Tags : Starc Test
ADVERTISEMENT
ADVERTISEMENT