செய்திகள்

டெஸ்ட் தொடருக்காக கர்நாடகத்தில் பயிற்சியை மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி!

DIN

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பு கர்நாடகத்தில் பயிற்சியைத் தொடங்குகிறார்கள் ஆஸி. வீரர்கள். 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9 முதல் தொடங்குகிறது. எந்தவொரு பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாமல் முதல் டெஸ்டில் களமிறங்குகிறது ஆஸி. அணி.

முதல் டெஸ்ட் நாகபுரியில் நடைபெறுகிறது. எனினும் கர்நாடகத்தில் ஆரம்பக்கட்டப் பயிற்சிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி. அலூர் நகரில் உள்ள கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் மைதானத்தில் ஆஸி. வீரர்கள் பயிற்சிகளைத் தொடங்கவுள்ளார்கள். சிட்னியிலிருந்து கிளம்பும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் நேராக பெங்களூருவுக்கு வரவுள்ளார்கள். பெங்களூரில் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கான ஏற்பாடுகளை நேஷனல் கிரிக்கெட் அகாதெமி கவனித்துக் கொள்கிறது. 

ஆஸ்திரேலியாவிலிருந்து கிளம்பும் முன்பு சிட்னியில் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களில் பயிற்சிகளை மேற்கொண்டார்கள் ஆஸி. வீரர்கள். அலூரில் நான்கு நாள் பயிற்சியை முடித்துவிட்டு பிப்ரவரி 6 அன்று பிறகு நாகபுரிக்குச் செல்லவுள்ளார்கள். அடுத்த நாள் முதல் நாகபுரியில் பயிற்சியை மேற்கொள்வார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT