செய்திகள்

இந்திய ஆடவர் ஹாக்கி பயிற்சியாளர் ராஜிநாமா

30th Jan 2023 06:05 PM

ADVERTISEMENT

 

இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிரஹாம் ரீட், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்திய ஆடவருக்கான ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா காலிறுதிக்குத் தகுதி பெறாமல் போட்டியிலிருந்து வெளியேறியது. நியூசிலாந்துக்கான எதிரான ஆட்டத்தில் ஷூட் அவுட் முறையில் தோற்றது. இதையடுத்து 9-வது இடத்தை அடைந்தது இந்திய அணி. 

இந்நிலையில் ஒடிஷாவில் நடைபெற்ற ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டி முடிவடைந்ததையடுத்து இந்திய அணியின் தோல்விக்குப் பொறுப்பேற்று தனது ராஜிநாமா கடிதத்தை ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கியிடம் வழங்கியுள்ளார் கிரஹாம் ரீட். அணியின் இதர பயிற்சியாளர் கிரேக் கிளார்க், ஆலோசகர் மிட்செல் டேவிட் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளார்கள். 

ADVERTISEMENT

டோக்கியா ஒலிம்பிக்ஸில் இந்திய அணி வெண்கலம் வென்றது கிரஹாம் ரீடின் முக்கியமான சாதனையாகும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி அரையிறுதியில் இந்திய ஆடவா் அணி பெல்ஜியத்திடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. இதையடுத்து வெண்கலத்துக்கான போட்டியில் ஜெர்மனியுடன் மோதிய இந்தியா சிறப்பாக விளையாடி 5-4 என ஆட்டத்தையும் வெண்கலப் பதக்கத்தையும் வென்றது. 41 வருடங்களுக்கு இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு ஒலிம்பிக் பதக்கம் கிடைத்தது. இதையடுத்து 2022 காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT