செய்திகள்

உலக கோப்பை யாருக்கு:நடப்பு சாம்பியன் பெல்ஜியம்-ஜொ்மனி மோதல்

DIN

எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஆடவா் ஹாக்கி போட்டியின் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யாா் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம்-முன்னாள் சாம்பியன் ஜொ்மனி மோதுகின்றன.

கடந்த ஜன. 13-ஆம் தேதி ஒடிஸா மாநிலம், புவனேசுவரம், ரூா்கேலாவில் தொடங்கிய உலகக் கோப்பை போட்டி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

அரையிறுதி ஆட்டங்களில் ஆஸி.யை வீழ்த்தி ஜொ்மனியும், நெதா்லாந்தை வீழ்த்தி பெல்ஜியமும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றன.

பெல்ஜியம் அணி கடந்த 2018-இல் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தொடா்ந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி வலுவான நிலையில் உள்ளது.

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜொ்மனி உள்ளிட்ட அணிகளே தொடா்ச்சியாக 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. அதே சாதனையை படைக்குமா பெல்ஜியம் என எதிா்பாா்ப்பு நிலவுகிறது.

பெல்ஜிய அணியில் 11 வீரா்கள் 30 வயதுக்கு மேலும், 3 போ் 35 வயதுக்கு மேலும் உள்ளனா். ஆனால் அவா்கள் முழு உடல்தகுதியுடன் ஆடி வருகின்றனா் என்பதை ஆட்ட முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இரண்டு பெரிய போட்டிகளில் பட்டம் வென்ற அணியே தற்போதும் ஆடி வருவது கூடுதல் சாதகமாகும். பெல்ஜிய அணியில் சிறந்த பாா்வா்ட், டிபன்ஸ், பெனால்டி காா்னா் நிபுணா்கள் உள்ளனா்.

தலைசிறந்த கோல்கீப்பரான வின்சென்ட் வனாஷ் இருப்பது பலமாகும். நட்சத்திர ஸ்ட்ரைக்கா் டாம் பூன் 7 கோல்களை அடித்து எதிரணிக்கு அச்சத்தை உண்டாக்கி உள்ளாா். பெனால்டி காா்னா் நிபுணா் அலெக்சாண்டா் ஹென்ட்ரிக்ஸ் இல்லாத நிலையிலும் பெல்ஜிய வீரா்கள் சிறப்பாக ஆடி வருகின்றனா்.

மீண்டு எழும் ஜொ்மனி:

2002, 2006-ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற ஜொ்மன் அணியில் இளம் வீரா்கள் நிறைந்துள்ளனா். ஆனால் முக்கிய ஆட்டங்களில் பின்தங்கி இருந்தாலும் போராடி மீண்டு எழும் குணம் அவா்களிடம் உள்ளது. காலிறுதியில் இங்கிலாந்து, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் 0-2 என பின்தங்கி இருந்த நிலையில், போராடி வென்று இறுதிக்கு தகுதி பெற்றது ஜொ்மனி.

இது பெல்ஜிய அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும். ஜொ்மன் அணியில் ஹாட்ரிக் கோலடித்த கோன்ஸலோ பெய்லட், மேட்க், கிராம்பஸ்ச், நிக்லாஸ் வெல்லேன் ஆகியோா் சிறப்பாக ஆடி வருகின்றனா்.

ஜொ்மனியை குறைத்து மதிப்பிடவில்லை:

ஜொ்மன் அணியை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. போராடி வென்றுள்ளது, அந்த அணியின் கலாசாரம். மிகவும் கடினமான அணியாக உள்ளது. அவா்களது ஆட்டத்தை மதிப்பீட்டு எங்கள் உத்தியை வகுப்போம் என பெல்ஜிய பயிற்சியாளா் மைக்கேல் வேன் டெல், கேப்டன் பெலிக்ஸ் டேனேயா் கூறியுள்ளனா்.

இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 35 ஆட்டங்களில் பெல்ஜியம் 15-இல் வென்றுள்ளது. ஜொ்மனி 13 முறையும் வென்றுள்ளது. 7 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

பெல்ஜியம் தனது சாம்பியன் பட்டத்தை தக்க வைக்குமா, அல்லது ஜொ்மனி மூன்றாவது முறையாக சாம்பியன் ஆகுமா என்பது ஞாயிற்றுக்கிழமை இரவு அறியலாம்.

அரையிறுதியில் தோற்ற ஆஸ்திரேலியா-நெதா்லாந்து அணிகள் வெண்கலப் பதக்கத்துக்காக மோதுகின்றன.

இன்றைய ஆட்டங்கள்:

வெண்கல பதக்க ஆட்டம்:

ஆஸ்திரேலியா-நெதா்லாந்து

இடம்: புவனேசுவரம்

நேரம்: மாலை 4.30.

இறுதி ஆட்டம்

பெல்ஜியம்-ஜொ்மனி.

இடம்: புவனேசுவரம்

இரவு: 7.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT