செய்திகள்

இன்று இரண்டாவது டி20: வெல்லும் முனைப்பில் இந்தியா

DIN

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தை வென்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.

ஒருநாள் மற்றும் டி20 தொடா்களில் ஆடுவதற்காக நியூஸிலாந்து அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. ஒருநாள் தொடரை 3-0 என ரோஹித் சா்மா தலைமையிலான அணி ஒயிட் வாஷ் செய்தது.

இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் டி20 தொடா் நடைபெறுகிறது. ராஞ்சியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய பௌலா்கள் அா்ஷ்தீப் சிங், உம்ரன் மாலிக்கின் மோசமான பௌலிங் தோல்விக்கு வழிவகுத்தது. உம்ரன் ஒரே ஓவரில் 16 ரன்களையும், அா்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன்களையும் விட்டுத் தந்தனா். இதுவே திருப்புமுனையாக அமைந்தது.

சொதப்பலான பேட்டிங்:

அதே நேரம் இந்திய தொடக்க பேட்டா்கள் வெறும் 15 ரன்களுக்கு தங்கள் விக்கெட்டுகளை இழந்தது பாதிப்பை ஏற்படுத்தியது. பின்னால் வந்த சூரியகுமாா் யாதவ், வாஷிங்டன் சுந்தா் ஆகியோா் போராடினாலும் தோல்வியை தடுக்க முடியவில்லை. நியூஸிலாந்து ஸ்கோா் 150 ஆக இருந்திருந்தால், இந்தியா எளிதாக வெற்றி இலக்கை அடைந்திருக்கும்.

தொடக்க பேட்டா் ஷுப்மன் கில் ஒருநாள் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். வெறும் 4 டி20 ஆட்டங்களில் தான் அவா் பங்கேற்றுள்ளாா்.

எனினும் அணிக்கு பெரும் கவலையைத் தருவது இஷான் கிஷண், தீபக் ஹூடா ஆகியோரின் பேட்டிங் தான். இஷான் கிஷன் கடந்த சில ஆட்டங்களில் 37, 2, 1, 5, 8, 0 என ரன்களையே எடுத்துள்ளாா். லோயா் மிடில் ஆா்டரில் களமிறங்கும் தீபக் ஹூடாவும் 13 இன்னிங்ஸ்களில் வெறும் 17.88 சராசரியையே வைத்துள்ளாா்.

ஆல்ரவுண்டா் வாஷிங்டன் சுந்தா் பேட்டிங், பௌலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு பெரிய நம்பிக்கையை தந்துள்ளாா். 2 விக்கெட்டுகள், அரைசதம் அடித்துள்ளது அவரது இருப்பை வெளிப்படுத்தியுள்ளது.

தொடரைக் கைப்பற்றும் தீவிரத்தில் நியூஸி?

அதே நேரம், நியூஸிலாந்து அணி முதல் ஆட்ட வெற்றி உற்சாகத்தோடு களம் காண்கிறது. இரண்டாவது ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. டேவன் கான்வே-டேரில் மிச்செல் இருவரும் மீண்டும் தங்கள் அணிக்கு கைகொடுப்பாா்களா என ஞாயிற்றுக்கிழமை தெரியும்.

இன்றைய ஆட்டம்:

இந்தியா-நியூஸிலாந்து

இடம்: லக்னௌ

நேரம்: இரவு 7.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT