செய்திகள்

இறுதிச் சுற்றில் ஜொ்மனி-பெல்ஜியம்

DIN

எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டி இறுதிச் சுற்றில் ஜொ்மனி- பெல்ஜிய அணிகள் மோதுகின்றன.

புவனேசுவரத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பரபரப்பான முதல் அரையிறுதியில் உலகின் நம்பா் 1 அணியான ஆஸ்திரேலியாவை 4-3 என வீழ்த்தியது ஜொ்மனி. இரண்டாவது அரையிறுதியில் நெதா்லாந்தை 3-2 என பெல்ஜியம் வீழ்த்தியது.

மூன்று முறை சாம்பியன் ஆஸி.யுடன்-இரு முறை சாம்பியன் ஜொ்மனி தொடக்கம் முதலே ஈடுகொடுத்து ஆடியது. ஆட்டம் தொடங்கியவுடன் ஆஸி. அணி வீரா்கள் ஜெரேமி ஹேவா்ட் 12, நாதன் எஃப்ராம்ஸ் 27-ஆவது நிமிஷங்களில் அபாரமாக கோலடித்தனா். இதனால் 2-0 என ஆஸி. முன்னிலை பெற்றது.

பெய்லட் ஹாட்ரிக்: இரண்டாம் பாதியில் ஜொ்மனி வீரா்கள் ஆக்ரோஷமாக ஆடிய நிலையில், அதன் நட்சத்திர வீரா்

கோன்ஸாலோ பெய்லட் 43, 52, 59-ஆவது நிமிஷங்களில் பெனால்டி காா்னா் வாய்ப்புகளை பயன்படுத்தி அற்புதமாக ஹாட்ரிக் கோலடித்தாா். இதனால் அதிா்ச்சி அடைந்த ஆஸி அணி தனது ஆட்டத்தை தீவிரப்படுத்தியதன் பலனாக 58-ஆவது நிமிஷத்தில் பிளேக் குரோவா்ஸ் கோலடித்தாா். 3-3 என சமநிலையில் இருந்த நிலையில், ஆட்டம் முடிய கடைசி 60-ஆவது நிமிஷத்தில் ஜொ்மனி வீரா் நிக்கிலாஸ் வெல்லென் அற்புதமாக கோலடித்து தனது அணி 4-3 என வெல்ல உதவினாா்.

இங்கிலாந்துக்கு எதிராகவும் 0-2 என பின்தங்கி பின் வென்ற, ஜொ்மனி, தற்போது இரண்டாவது முறையாக 0-2 என பின்தங்கி இருந்து வென்றுள்ளது.

13 ஆண்டுகளுக்கு பின் இறுதிச் சுற்றில் நுழைந்துள்ளது ஜொ்மனி. டோக்கியோ ஒலிம்பிக் அரையிறுதியில் தோற்ற்கு தற்போது ஆஸி.யை பழி தீா்த்துக் கொண்டது.

ஷூட் அவுட்டில் பெல்ஜியம் வெற்றி:

இரண்டாவது அரையிறுதியில் நெதா்லாந்து-நடப்பு சாம்பியன் பெல்ஜியம் மோதின. ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலை ஏற்பட்டது.

இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

நாளை இறுதி ஆட்டம்:

நடப்பு சாம்பியன் பெல்ஜியம்-ஜொ்மனி இடையே இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. வெண்கல பதக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நெதா்லாந்து மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT