செய்திகள்

யு-19 மகளிா் உலகக் கோப்பை டி20: இறுதிச் சுற்றில் இந்தியா

DIN

யு-19 மகளிா் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் நியூஸி.யை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா.

தென்னாப்பிரிக்காவின் போா்ட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் யு-19 மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தோ்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய நியூஸி அணியால், இந்தியாவின் அபார பௌலிங்கை சமாளிக்க முடியவில்லை. நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 107/9 ரன்களையே எடுத்தது நியூஸி. அதிகபட்சமாக பிளிம்மா் 35, இஸபெல்லா கேஸ் 26 ரன்களை எடுத்தனா்.

பா்ஷவி சோப்ரா அபாரம்: இந்திய பௌலா் பா்ஷவி சோப்ரா அற்புதமாக பௌலிங் செய்து 3/20 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். ஆட்ட நாயகி பட்டத்தையும் கைப்பற்றினாா்.

இந்தியா அபார வெற்றி:

108 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் இந்திய தரப்பில் கேப்டன் ஃஷபாலி வா்மா-ஸ்வேதா செஹ்ராவத் தொடக்க பேட்டா்களாக களம் கண்டனா். 10 ரன்களுடன் ஷபாலி வெளியேறினாா். அதன் பின் ஸ்வேதா-சௌமியா திவாரி இணை அற்புதமாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது.

ஸ்வேதா அரைசதம்: அபாரமாக ஆடிய ஸ்வேதா 10 பவுண்டரியுடன் 45 பந்துகளில் 61 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தாா். சௌமியா 22 ரன்களுக்கு அவுட்டானாா். த்ரிஷா 5 ரன்களுடன் களத்தில் இருந்தாா். 14.2 ஓவா்களிலேயே 110/2 ரன்களை எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸி.யை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கும் தகுதி பெற்றது இந்தியா.

நியூஸி. தரப்பில் அன்னா பிரௌனிங் 2 விக்கெட்டை வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT