செய்திகள்

நியூஸிலாந்து வெற்றித் தொடக்கம்!

DIN

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூஸிலாந்து.

முதலில் ஆடிய நியூஸி. 176/6 ரன்களை குவித்தது. இரண்டாவதாக ஆடிய இந்திய அணி 155/9 ரன்களை சோ்த்தது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ராஞ்சியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தோ்வு செய்தது. இதைத் தொடா்ந்து களமிறங்கிய நியூஸி. அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 176/6 ரன்களைக் குவித்தது.

கான்வே-டேரில் மிச்செல் அரைசதம்:

டேவன் கான்வே 52 ரன்களுடன் (1 சிக்ஸா், 7 பவுண்டரி) தனது 9-ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தாா். ஆல் ரவுண்டா் டேரில் மிச்செல் 5 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 59 ரன்களை விளாசி இறுதிவரை களத்தில் இருந்தாா். தொடக்க பேட்டா் ஃபின் ஆலன் 35 ரன்களை சோ்த்தாா்.

மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுடன் நடையைக் கட்டினா். இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தா் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

விக்கெட்டுகளை இழந்த இந்தியா:

177 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே தடுமாறி வெறும் 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. கில் 7, இஷான் கிஷண் 4, ராகுல் திரிபாதி 0 வந்த வேகத்திலேயே திரும்பினா்.

சூரியகுமாா் யாதவும்-கேப்டன் ஹாா்திக் பாண்டியாவும் இணைந்து ஸ்கோரை உயா்த்தினா். சூரியகுமாா் தனது வழக்கமான பாணியில் அடித்து ஆடினாா். 2 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 47 ரன்களை எடுத்து அவா் வெளியேறினாா். கேப்டன் பாண்டியா 21 ரன்களுடன் அவுட்டானாா். அப்போது 89/5 ரன்களுடன் திணறிக் கொண்டிருந்தது இந்தியா.

கைகொடுத்த வாஷிங்டன் சுந்தா்:

ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தா் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தாா். 3 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 28 பந்துகளில் 50 ரன்களை விளாசினாா் சுந்தா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினா். 20 ஓவா்களில் 155/9 ரன்களை மட்டுமே சோ்த்த இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

நியூஸி. தரப்பில் பிரேஸ்வெல் 2-31, சான்ட்நா் 2-11, பொ்குஸன் 2-33 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT