செய்திகள்

கேப்டன்களுக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திய ராஞ்சி ஆடுகளம்!

DIN

ராஞ்சி ஆடுகளம் பற்றிய தங்களது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்கள் இந்திய, நியூசிலாந்து கேப்டன்கள்.

ராஞ்சியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து. முதலில் ஆடிய நியூஸி. 176/6 ரன்களைக் குவித்தது. டேவன் கான்வே 52 ரன்கள் (1 சிக்ஸர், 7 பவுண்டரிகள்), ஆல் ரவுண்டா் டேரில் மிட்செல் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் (5 சிக்ஸா்கள், 3 பவுண்டரிகள்) எடுத்தார்கள். இரண்டாவதாக ஆடிய இந்திய அணி 155/9 ரன்களை எடுத்துத் தோல்வியடைந்தது. சூர்யகுமார் யாதவ் 47, வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுத்தார்கள். 

ராஞ்சி ஆடுகளம் பற்றி இந்திய கேப்டன் பாண்டியா கூறியதாவது:

ராஞ்சி ஆடுகளம் இப்படி இருக்கும் என யாருமே நினைக்கவில்லை. இரு அணிகளுக்குமே ஆச்சர்யமளித்தது. இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்து அணி நன்கு விளையாடியது. அதனால் தான் முடிவு அவ்வாறு அமைந்தது. பந்து புதிதாக இருந்தபோதுதான் அதிகமாகச் சுழன்றது. சுழலுக்கும் பவுன்சுக்கும் சாதகமாக ஆடுகளம் இருந்தது நாங்கள் எதிர்பாராதது. நானும் சூர்யகுமார் யாதவும் களத்தில் இருக்கும்வரை போட்டியிட்டோம். வாஷிங்டன் சுந்தர் நன்றாக விளையாடினார் என்றார்.

நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் கூறியதாவது:

2-வது இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சை வைத்துப் பார்க்கும்போது ஆடுகளம் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருநாள் தொடரில் நிறைய ரன்கள் அடிக்கப்பட்டன. டி20யில் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தைப் பார்ப்பது நன்றாக உள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT